இயக்குனர் இமயத்திற்கு நடிப்பின் அசுரன் தனுஷ் செய்யும் நல்ல காரியம்
சென்னை: பாரதிராஜாவின் அடுத்த படமான மீண்டும் ஒரு மரியாதை படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. பாரதிராஜா தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான இயக்குனர். தனது படங்களால் அனைவரையும் கவர்ந்தவர். தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்குகிறார்.
என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்று படம் துவங்கும் போது வரும் வசனம் வெறும் வசனம் அல்ல தமிழ் சினிமாவை பல ஆண்டுகளாக ஆண்ட ஒரு சினிமா சாம்ராஜ்யத்தின் குறியீடு .

16 வயதினிலே என்று தனது முதல் படத்தை தமிழ் சினிமாவின் பல வருடங்களாக ஆளும் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல்ஹாசனை வைத்து எடுத்தார் பாரதிராஜா. இதில் ரஜினி கதாபாத்திரத்திற்கு பரட்டை என்ற பெயர் அச்சமயம் மிகவும் பிரபலம் அடைந்தது.
அடுத்த படமாக ராதிகாவை அறிமுகம் செய்து வைத்து கிழக்கே போகும் ரயில் என்ற படத்தை இயக்கினார் இப்படம் வெற்றி பெற்றது ராதிகாவும் தமிழ் ரசிகர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

இதன் பின் கமல்ஹாசன் வைத்து சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தை இயக்கினார். தற்போது வெளியாகி வரும் பல சைக்கோ படங்களுக்கு அடிதளம் அமைத்ததே இப்படம் தான் என்று பலர் இன்று வரை சொல்லி வருகின்றனர். இதன் பின் பல படங்களை இயக்கினார் பாரதிராஜா.
குறிப்பாக,நிழல்கள்,அலைகள் ஒய்வதில்லை,காதல் ஓவியம்,ஒரு கைதியின் டைரி,முதல் மரியாதை போன்ற படங்கள் காலத்தால் அழியாத திரைப்படங்கள். தமிழ் சினிமாவில் கிராமிய கதை களத்துடன் அதிக படங்கள் இயக்கி அதில் வெற்றியும் கண்டவர் பாரதிராஜா.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பல முறை பெற்றுள்ளார். மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் பாரதிராஜா.
இயக்குனர் பாரதிராஜா மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.சுமார் ஏழு வருடங்கள் கழித்து படத்தை இயக்கி வருகிறார் பாரதிராஜா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது இதனை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார் என்பது தான் கூடுதல் சிறப்பு .


Click it and Unblock the Notifications











