twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிராஜாவிற்கு தேசிய விருது பெற்று தந்த சினிமாக்கள்...எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர் என இன்று வரை பிரபலமாக இருந்து வருபவர் பாரதிராஜா. 1977 ம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த 16 வயதினிலேயே படத்தின் வழியாக தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர்.

    கிராமத்து கதைகளை படமாக்குவதில் கைதேர்ந்தவரான பாரதிராஜா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இவர் பல படங்களை இயக்கி, பல விருதுகளை வென்றுள்ளார்.6 தேசிய விருதுகள், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள்,2 தமிழக அரசின் சினிமா விருதுகள், 2 நந்தி விருதுகளை பெற்றுள்ள பாரதிராஜாவிற்கு சத்யபாமா பல்லைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

    நார்த் இந்தியாவுல கூட நான் மாஸ்டர் ஹீரோயின் தான்.. விஜய்யோட ரீச் அப்படி.. மாளவிகா மோகனன் நச் பதில்! நார்த் இந்தியாவுல கூட நான் மாஸ்டர் ஹீரோயின் தான்.. விஜய்யோட ரீச் அப்படி.. மாளவிகா மோகனன் நச் பதில்!

    இப்படிப்பட்ட பாரதிராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தேசிய விருதுகள் பெற்றுத் தந்த படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படத்திற்காகவும் பாரதிராஜா தேசிய விருது பெற்றுள்ளார்.

    சீதகோகா சிலுகா

    சீதகோகா சிலுகா

    தெலுங்கில் பாரதிராஜா இயக்கிய சீதகோகா சிலுகா என்ற படம் சிறந்த படத்திற்காக 1982 ம் ஆண்டு தேசிய விருது பெற்றது. டைட்டிலை பார்த்து இது ஏதோ படம் என நினைத்து விட வேண்டாம். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு வெர்சன் தான் சீதகோகா சிலுகா. ஆனால் தெலுங்கு வெர்சன் படம் மட்டும் தான் தேசிய விருது பெற்றது.

    முதல் மரியாதை

    முதல் மரியாதை

    தமிழ் சினிமாவில் எவர்கிரீன் படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது முதல் மரியாதை. சிவாஜி, ராதா நடித்த இந்த படத்தை பாரதிராஜா தானே இயக்கி, தயாரிக்கவும் செய்தார். இந்த படம் 1986 ம் ஆண்டு தேசிய விருது பெற்றது. ஜெயகாந்தன் எழுதிய சமுகம் என்பது நாலு பேர் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பாரதிராஜாவிற்கு மட்டுமல்ல, சிறந்த பாடலாசிரியருக்காக வைரமுத்துவிற்கும் தேசிய விருது பெற்று தந்த படம். இந்த படத்தில் லீட் ரோலில் நடிக்க முதலில் ராஜேஷ், எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோரை முடிவு செய்து, பிறகு முன்றாவதாக தான் சிவாஜியை நடிக்க வைத்துள்ளனர்.இதே போல் ஹீரோயின் ரோலுக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் ராதிகா தான்.ஆனால் அவரை விட உயரம் போன்றவற்றில் ராதா பொருத்தமாக இருப்பார் என மற்றவர்கள் நினைத்ததால் பிறகு ராதா மாற்றப்பட்டார்.

    வேதம் புதிது

    வேதம் புதிது

    பாரதிராஜா இயக்கிய முக்கியமான படங்களில் ஒன்று வேதம் புதிது. இந்த படம் 1988ம் ஆண்டு சிறந்த சமுக பிரச்சனைகளை பேசிய படமாக தேர்வு செய்யப்பட்டது. சத்யராஜ், சரிதா, அமலா, ராஜா, சாருஹாசன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் சாதிய பிரச்சனைகள் பற்றி பேசி பல சர்ச்சைகளில் சிக்கியது. ஆனால் இந்த படம் ஒன்றல்ல இரண்டு தேசிய விருதுகளை வென்றது. ஒன்று சிறந்த படத்திற்கானது, மற்றொன்று சிறந்த எடிட்டிங்கிற்காக வழங்கப்பட்டது.

    கருத்தம்மா

    கருத்தம்மா

    வேதம் புதிது படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 1995 ம் ஆண்டு பாரதிராஜாவிற்கு தேசிய விருது பெற்று வந்த படம் கருத்தம்மா. சிறந்த குடும்ப நல படத்திற்கான தேசிய விருது இந்த படத்திற்கு வழங்கப்பட்டது. பெண் சிசு கொலைக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றது. போராளே பொண்ணுத்தாய் பாடலை எழுதி வைரமுத்து, அந்த பாடலை பாடிய ஸ்வர்ணலதா, படத்தை இயக்கிய பாரதிராஜா ஆகியோர் தேசிய விருது பெற்றனர்.

    அந்திமந்தாரை

    அந்திமந்தாரை

    1997 ம் ஆண்டு அந்திமந்தாரை படத்திற்காகவும் பாரதிராஜாவிற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்தது. விஜயக்குமார், ஜெயசுதா ஆகியோர் நடித்தது. இந்த படம் வந்ததாகவோ, பெரிதாக தியேட்டர்களில் ஓடியதாகவோ யாருக்கும் தெரியாது. லோ
    பட்ஜெட் படமாக இயக்கப்பட்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

    காதல் பூக்கள்

    காதல் பூக்கள்

    பாரதிராஜா எழுதி, இயக்கி, நடித்த படம் காதல் பூக்கள். முரளி, மனோஜ் பாரதிராஜா, பிரத்யுக்ஷா, சிந்து மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, பிறகு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதினை பாரதிராஜாவிற்கு பெற்று தந்தது. இந்த படத்திற்காக முரளிக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது கிடைத்தது.

    English summary
    Director, actor Bharathiraja celebrates his 80th birthday. He won 6 national awards for his best direction. Here we listed out about Bharathiraja's national award winning films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X