மீண்டும் ஒரு மரியாதை.. சத்தமில்லாமல் ஓம் படத்தின் தலைப்பை மாற்றிய பாரதிராஜா!

சென்னை: பாரதிராஜாவின் ஓம் திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜா, தனது 75வது வயதில், படம் இயக்குவது, நடிப்பது என பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த கென்னடி கிளப் படத்தில் சமீபத்தில் அவர் நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் அவர் நடித்தார்.

Bharathirajas OM retitled as Meendum oru Mariyathai

இதற்கிடைய ஓம் என்ற தலைப்பில் படம் ஒன்றையும் பாரதிராஜா இயக்கி நடித்து வந்தார். ஒரு இளம் பெண்ணுக்கும், வயதான ஆணுக்கும் இடையிலான உறவு பற்றி படம் பேசுகிறது. இதில் பாரதிராஜாவுடன், நக்ஷத்ரா எனும் இளம்பெண் நடித்துள்ளார். இவர்களுடன் ஜோ மல்லூரி, மௌனிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஓம் படம் கிட்டத்தட்ட முதல் மரியாதை படத்தின் இரண்டாம் பாகம் போல் எடுக்கப்பட்டுள்ளது. முதல் மரியாதையில் கிராமத்து களத்தில் வயதான ஆணுக்கும், இளம் பெண்ணுக்குமான உறவைப் பேசியிருந்த பாரதிராஜா, இப்படத்தில் நகரத்து சூழலைப் பேசியிருக்கிறார். ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பெயரை 'மீண்டும் ஒரு மரியாதை' என பாரதிராஜா மாற்றியுள்ளார். இந்த தலைப்பு அவருடைய முதல் மரியாதை படத்தை குறிக்கும் வகையில் இருக்கிறது. எனவே இது முதல் மரியாதை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X