என் பட ஹீரோயின்களை அடிக்கிறேனா?: பாரதிராஜா விளக்கம்
சென்னை: தனது படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை அடிப்பது குறித்து இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை பாண்டிய நாடு படத்திற்காக இயக்குனர் பாரதிராஜா பெற்றார். அவருக்கு விருதை சுஹாசினி மணிரத்னம் வழங்கினார்.
விருதை வாங்கிக் கொண்டு பாரதிராஜாவை மேடையைவிட்டு செல்லவிடவில்லை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி என்ற டிடி.

ஹீரோயின்
பாரதிராஜாவின் ஹீரோயின்களில் அவருக்கு பிடித்தவர் யார் என்று டிடி சுஹாசினியை பார்த்து கேட்க அவர் ஸ்ரீதேவி என்றார்.

பாரதிராஜா
சுஹாசினியின் பதிலை கேட்ட பாரதிராஜா என் அனைத்து ஹீரோயின்களிலும் உள்ள பாரதிராஜாவை தான் பிடிக்கும் என்று கூறினார்.

அடி
உங்கள் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை அடிப்பீர்களாமே உண்மையா என்று டிடி பாரதிராஜாவிடம் கேட்டார்.

செல்லத்தட்டு
ஹீரோயின்களை அடிக்க மாட்டேன். செல்லமாக தட்டிக் கொடுப்பேன் என்று கூறி சமாளித்தார் பாரதிராஜா.

திட்டு
ஹீரோயின்கள் நன்றாக நடித்தால் பாரதிராஜா திட்டக் கூட மாட்டார் என்று சுஹாசினி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











