'சிவப்பு ரோஜாக்கள் பார்ட் 2'..? இயக்குனர் ஆகிறார் மனோஜ் பாரதிராஜா.. உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்!

By

சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி படம் இயக்க இருக்கிறார். இது சிவப்பு ரோஜாக்கள் 2 வது பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன், மனோஜ் கே.பாரதி. இவர் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் உள்பட பல படங்களில் நடித்தார்.

கமல், ஸ்ரீதேவி

கமல், ஸ்ரீதேவி

கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட, மனோஜ் நடிப்பில் இருந்து விலகி, உதவி இயக்குனராக பணியாற்றினார். இவருக்கு படம் இயக்க வேண்டும் என்பது ஆசை. இதுபற்றி பல்வேறு பேட்டிகளில் அவர் கூறிவந்தார். பாரதிராஜா இயக்கத்தில், கமல், ஸ்ரீதேவி நடித்த படம், 'சிகப்பு ரோஜாக்கள்'.

அறிவிப்பு வெளியானது

அறிவிப்பு வெளியானது

1978 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா, இசையமைத்து இருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக மனோஜ் கூறிவந்தார். சில வருடங்களுக்கு முன் இதற்கான அறிவிப்பு வெளியானது. பாரதிராஜா தயாரிப்பில் 'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தை மனோஜ் இயக்க இருந்தார்.

நேரம் வரும்போது

நேரம் வரும்போது

ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படம் அறிவிப்புடன் நின்று விட்டது. அதன் பிறகு அந்தப் படம் தொடங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் நேரம் வரும்போது அந்தப் படத்தை இயக்குவேன் என்றும் மனோஜ் கூறியிருந்தார்.

பல்வேறு செய்திகள்

பல்வேறு செய்திகள்

இதனிடையே 'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதை மறுத்திருந்த மனோஜ், 'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அவை எதுவுமே உண்மையில்லை.

உறுதிப்படுத்தி உள்ளார்

உறுதிப்படுத்தி உள்ளார்

அனைத்தும் முடிவானதும் நானும், என் தந்தை பாரதிராஜாவும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது மனோஜ் படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

முழுமை தகவல்

முழுமை தகவல்

அவருடைய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் இதை தயாரிக்க இருக்கிறது. அடுத்த வருடம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. இது, சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்கிறார்கள். படம் பற்றிய முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X