twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, அஜித் படங்களுக்கு 60%: தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திற்கு பாரதிராஜா எச்சரிக்கை

    By Siva
    |

    சென்னை: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள விகிதாச்சார முறையை எச்சரித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    என் இனிய தமிழ் மக்களே!

    Bharathirajas warning to TN theatre owners association

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய ஒரு அபாயகரமான செயல் திட்டத்தை திரு. திருப்பூர் சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் இயங்குகின்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    ரீல் மோடி மீது கொலவெறியில் அபிஷேக் பச்சன்: ஃப்ரீயா விடச் சொன்ன ஐஸ்வர்யா ராய் ரீல் மோடி மீது கொலவெறியில் அபிஷேக் பச்சன்: ஃப்ரீயா விடச் சொன்ன ஐஸ்வர்யா ராய்

    அந்த அறிக்கையின்படி ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவிகித வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவிகித வசூலையும் அந்தப் படத்தை விநியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம்.

    அந்த அறிக்கையின் முதல் பத்தியில் மகிழ்ச்சியுடனும், வளர்ச்சியுடனும் வளர்ந்து வரும் வேளையில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    அந்த வரிகளைப் படிக்கும்போது திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இருக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களை நசுக்க அவர்கள் முடிவெடுத்து விட்டார்களோ என்ற அச்சம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

    இந்த விகிதாச்சார முறை மட்டும் அமலுக்கு வருமானால் ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்- வினியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.

    இப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு அதற்குப் பின்னர் அந்த முடிவுகளைப் பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

    தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால் இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Bharathiraja has warned Tamil Nadu Theatre and Multiplex owner's association about the statement it released recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X