மனோஜ் பாரதிராஜாவின் மகளை பார்த்து இருக்கீங்களா? அடுத்த ஹீரோயின் இவங்க தானோ!

சென்னை: இயக்குநர் இமயம் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பாரதிராஜாவின் மகன் தான் மனோஜ் பாரதிராஜா. இவர் நடிகராக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இயக்குநர் அவதாரம் எடுத்து மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். தற்போது, மனோஜ் பாரதிராஜாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவரது மகள் ஹீரோயின் போல செம க்யூட்டாக இருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும், அழகியலையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை தமது செல்லுலாய்ட் கண்களால் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சினிமாவை செட்டுக்குள் பார்த்து பார்த்து வறண்டு போன கண்களுக்கு, கிராமத்து வீடுகளுக்குள் புகுந்து, இயற்கை அழகை கேமராவில் புகுத்தி "என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா "எனும் அந்த கம்பீரமான குரல் தமிழர்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை நினைவூட்டும்.

Bharathiraja Son manoj bharathiraja family photos goes viral

மனோஜ் பாரதிராஜா: பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தனது இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம், தனது மகன் மனோஜ் பாரதிராஜவை அறிமுகப்படுத்தினார். அந்த படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், ஈரநிலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் அவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை. இதனால், சில காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மனோஜ் பாரதிராஜா, சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Bharathiraja Son manoj bharathiraja family photos goes viral

மார்கழி திங்கள்: இவருக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை என்பதால், சோர்வு அடையாமல் வெளிநாட்டுக்கு சென்று இயக்குநருக்கான பிரத்யேகமான பயிற்சியை பயின்று இயக்குநராக அவதாரம் எடுத்த மனோஜ் பாரதிராஜா, மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார்.

Bharathiraja Son manoj bharathiraja family photos goes viral

கிராமத்துக்காதலை ரசித்து சித்தரித்த அழிவில்லா காதல் படங்களை கொடுத்த ஜாம்பவான் பாரதிராஜாவின் மகன் என்பதை, தனது முதல் படத்திலேயே கையாண்டு ஒரு அழகான அழுத்தமான காதல் கதையை கொடுத்தார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருந்தார்.மேலும், , ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Bharathiraja Son manoj bharathiraja family photos goes viral

இவ்வளவு பெரிய மகளா: நடிகராக இருந்து இயக்குநராக மாறி இருக்கும் மனோஜ் பாரதிராஜாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என்றும், செம க்யூடா அழகா? இருக்காங்களே அடுத்த ஹீரோயின் இவங்க தானா என கேட்டு வருகின்றனர்.

Bharathiraja Son manoj bharathiraja family photos goes viral

நடிகர் மனோஜ் பாரதிராஜா, சாதுரியன் படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மதிவதனி மற்றும் அர்த்திகா என 2 மகள்கள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X