Manoj Bharathiraja: நீலாங்கரையில் விஜய் வீட்டருகே.. மனோஜ் பாரதிராஜாவுக்கு இறுதிச்சடங்கு

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று அதாவது மார்ச் 25ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது, 48. ஏற்கனவே இருதய நோய் மனோஜ்க்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது 48 வது வயதில் காலமானது திரைத்துறையினர் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இப்படியான நிலையில் இவரது இறுதிச் சடங்குகள் நீலாங்கரையில், நடிகர் விஜய் வீட்டிற்கு அருகே உள்ள, பாரதிராஜாவின் வீட்டில் நடைபெற உள்ளது.

நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா தனது திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குநராக தொடங்கியிருந்தாலும், அதன் பின்னர் நடிகர் அவதாரமும் எடுத்தார். நடிகராக ஆவதற்கு முழு காரணமும், பாரதிராஜாதான். மனோஜ்க்கு நடிப்பின் மீது கொஞ்சமும் ஈடுபாடு இல்லை. ஆனாலும் பாரதிராஜாவின் வற்புறுத்தலால், தாஜ்மஹால் படத்தின் மூலம் நடிகராக மாறினார். அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் அவரது தந்தை பாரதிராஜாவை இயக்கியிருக்கிறார்.

Bharathiraja Son Manoj Bharathiraja s last rites held near Vijay s house in Neelankarai
இசைஞானி இரங்கல்: மனோஜ் பாரதிராஜா மறைவுச் செய்தி திரையுலகை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், " என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நடந்திருக்க வேண்டாம். நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என காலம் விதித்திருக்கின்ற காரணத்தினால், மனோஜ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
Bharathiraja Son Manoj Bharathiraja s last rites held near Vijay s house in Neelankarai

இறுதிச் சடங்கு: திரையுலகில் பலரும் பாரதிராஜாவை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல அவரது வீட்டுக்குச் சென்று கொண்டுள்ளார்கள். இந்நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் என்பது, சென்னை, நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரன் நகரில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாரதிராஜாவின் வீட்டிற்கு அருகே நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bharathiraja Son Manoj Bharathiraja s last rites held near Vijay s house in Neelankarai

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X