48 வயதில் முடிந்து போன வாழ்க்கை.. கடவுளே உனக்கு கண் இல்லையா? பதறும் பிரபலங்கள்!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் சற்று முன் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. இவரின் திடீர் மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள் பலர் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி தேனியில் பிறந்தார். இவர் பாரதி ராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' படம் மூலம் நடிகராக 1999ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றன. இதைத் தொடர்ந்து சமுத்திரன், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் ஆகிய படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாததால், இவருக்கு சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. இதைத்தொடர்ந்து, மகா நடிகன், சாதூர்யன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களிலும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனோஜ் கடைசியாக கார்த்தியின் 'விருமன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிரபலங்கள் இரங்கல்: இந்நிலையில், நடிகர் மனோஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று மாலை 6 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். ஒரு மாதத்திற்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோஜ் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில திடீரென காலமானார். இவரது மறைவு திரைத்துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 48 வயதில் முடிந்து இப்படி ஒரு முடிவா என்றும், கடவுளே உனக்கு கண் இல்லையா? என பிரபலங்கள் பலரும் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மனோஜ், தனது தனது நீண்ட நாள் தோழியான நடிகை நந்தனாவை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நந்தனாவின் சொந்த ஊரான கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆர்த்திகா, மதிவதனி என 2 மகள்கள் உள்ளனர். நடிகை நந்தனா, ABCD மற்றும் வெற்றி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், மனோஜ்க்கு ஜோடியாக சாதுரியன் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











