twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய், சூர்யாவை வரம்பு மீறி பேசுவதா? இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.. பாரதிராஜா ஆவேச அறிக்கை!

    By
    |

    சென்னை: விஜய், சூர்யாவை வரம்பு மீறி பேசுவதா? இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஒருவர், சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றியும் அவர் குடும்பங்கள் பற்றியும் அவதூறாகப் பேசி இருந்தார்.

    இதைக் கண்டித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ஆவேச அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. தெறிக்கும் டிவிட்டர்.. ட்ரென்டிங்கில் டாப்! #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லைரஜினி சொன்ன அந்த வார்த்தை.. தெறிக்கும் டிவிட்டர்.. ட்ரென்டிங்கில் டாப்! #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை

    மல்லாக்க படுத்து

    மல்லாக்க படுத்து

    சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாசாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

    கண்ணியமான வாழ்க்கை

    கண்ணியமான வாழ்க்கை

    ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்துகொள்கிறது. அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே!

    நிறுத்த வேண்டும்

    நிறுத்த வேண்டும்

    அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல அந்தப் பெண், தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார்.
    திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன். சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரவமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

    இகழ்வது ஏற்கத்தக்கதல்ல

    இகழ்வது ஏற்கத்தக்கதல்ல

    இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. உழைத்துப் போராடி. எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது.

    நெறிபட்டா கிடக்கிறது?

    நெறிபட்டா கிடக்கிறது?

    அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும் நடிகர் சங்கம்
    மட்டுமல்ல, வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை. தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது?

    கண்டிக்க வேண்டாமா?

    கண்டிக்க வேண்டாமா?

    யாரோ ஒருவனின் அவமானம்தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும். அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா? சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும் ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம்.

    கத்தரி போடுங்கள்

    கத்தரி போடுங்கள்

    இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை, எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே. இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை. தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    கேவலமாகவும் ஆபாசமாகவும்

    கேவலமாகவும் ஆபாசமாகவும்

    உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன். நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்? நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

    தூசு விழுந்தாலும்

    தூசு விழுந்தாலும்

    சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன. ஒரு அறிக்கை விட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது. உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே. என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    Bharathiraja statement regarding the recent issue of Actor vijay and Suriya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X