twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் தாஜ்மகால் பாரதிராஜா! - பார்த்திபன் பேச்சு

    By Shankar
    |

    Parthiban
    காதலின் சின்னம் தாஜ்மகால் என்றால், தமிழ் சினிமாவின் தாஜ்மகால் இயக்குநர் பாரதிராஜாதான், என்றார் நடிகர் பார்த்திபன்.

    பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார்.

    இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி, போட்டோ ஷூட் கூட முடிந்த நிலையில் அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் மாற்றிவிட்டார் பாரதிராஜா. அவருக்குப் பதில் அமீர் நடிப்பார் என அறிவித்தார். ஆனால் கடைசியில் அமீரையும் நீக்கிவிட்டார்.

    இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கு பார்த்திபனை பாரதிராஜா அழைக்க, பழைய நிகழ்வுகளை மனதில் கொள்ளாமல் விழாவுக்குப் போய் நீண்ட வாழ்த்துரையையும் வழங்கினார் பார்த்திபன்.

    தான் பேசியதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன். அந்த பேச்சு முழுமையாக:

    "உலக தர குறியீடு பெற்றிருக்கும் மல்லிகை பூக்களாய் சிதறி கிடக்கும் மதுரை மக்களே, மாலை வணக்கம்!
    மாலை மீனாட்சிக்கு
    வணக்கம் உங்களுக்கு.

    நான் ஒரு கதை சொல்லப் போறேன் ஆனா அது கத உட்ற மாதிரியே இருக்கும்.
    சுமார் 1013 வருடங்களுக்கு முன் மதுரையை , பெயர் போன ஒரு ராஜா ஆண்டான்,அதனால் பெயர் தெரியவில்லை. அவன் சகலாகலா வல்லவன் பராக்கிரமசாலி அவனை ஒண்டிக்கு ஒண்டி நின்று ஜெயிக்கமுடியாத எதிரி நாட்டு மன்னன் நயவஞ்சக சூழ்ச்சியால் அவனை சுற்றி வளைத்து சங்கிலியால் கட்டிப்போட்டு தாக்கினான். கைகள்,கால்கள்,கழுத்து, இதயம் இப்படி துண்டுத் துண்டாக வெட்டினான் உயிர் போக வில்லை. பின் ஏதோ ஒரு நரம்பில் தான் அந்த உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதை அறிந்து அதைத் தேடினான். bomb-ஐ செயலிழக்க செய்யும் ஒரு குறுப்பிட்ட wire-ஐ தேடுவதைப்போல...

    முடிவில் 'காதல்' என்ற wire-ஐ வெட்ட அந்த உயிர் பிரிய... பிரியும் முன் "என் உயிருக்குள்ள ஒரு சின்ன ஒயரா காதல் இருந்ததால ஈசியா கட் பண்ணிட்டே, இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சி இதே மண்ணுல ஒரு ராஜா காதலே உடலா-உயிரா-உணர்வா இருப்பான் அவனை யாரும் ஒரு மண்ணும் பண்ண முடியாது . இந்த மண்ணுல காதல் இருக்க வரைக்கும் அவனும் இருப்பான். அவன் காதல் சினிமா மேல இருக்கும் அதனால சினிமா இருக்க வரைக்கும் அவனை அழிக்க முடியாது இது சத்..." என செத்தான். அன்று அந்த ராஜா சொன்ன ராஜா இந்த ராஜா-பாரதிராஜா தான்!

    காதல் சின்னம் தாஜ் மஹால். தமிழ் சினிமாவின் தாஜ் மஹால் இந்த பாரதிராஜா.
    அ.கொ.கொ.வீரனில் நடித்த ஒரு பெண் என்னிடம்"இன்னமும் என்னம்மா காதல நடிச்சி காட்டுறார் தெரியுமா?" என்றார். நான் சொன்னேன், "அடிப்பாவி மோசம் போய்ட்டே அது நடிப்பு இல்லேடி நிஜம்! அவரு எந்த expression-ஐயும் நடிச்சி காட்டுவாரு ஆனா காதல் மட்டும் அவர் கிட்டே நடிப்பா இருக்காது அத்தனையும் அக்மார்க் நிஜம். நம்பி பக்கத்துல போயி மோசம் போய்டாதே," என்றேன்.

    இப்பவும் கதவோரமா, ஜன்னலோரமா ஒரு பொண்ணோட பாதி முகம் எட்டிப் பாத்தா, எனக்கு அந்த பொண்ணு முகத்துல பாரதிராஜாவோட முகம் தான் தெரியும் அந்த அளவுக்கு ஒரு பாதிப்பா ஏற்படுத்தி இருக்காரு பாரதிராஜா.

    "அடி ஆத்தாடி இள மனசொன்னு றெக்க கட்டி பறக்குது சரிதானா?" இளையராஜாவோட பாட்டும் இந்த ராஜாவோட படமாக்குதலும்... சரியா சொல்லனும்னா, இசையும் காட்சியும் கலவி கொள்வது போல இருக்கும்.

    "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாட்டுல, மஞ்சள உரசும் போது நம்ப மனசையே உரசுற மாதிரி இருக்கும். "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" சாங்ல ஒரு தாமரை மொட்டு ராதாவோட முகத்தில இருந்து கீழ இறங்கி ஒரு குறிப்பிட்ட ஸ்பாட்டுக்கு வரும் போது ராதாவோட கை அத அழுத்தி பிடிக்கும். ..க்கும் போது அந்த உஷ்ணத்துல பெண்கள் மட்டுமில்லே ஆண்கள் மனசும் கர்ப்பம் ஆயிடும்!!!

    மயிலு, பாஞ்சாலி, பஞ்சவர்ணம், முத்துப்பேச்சி,செல்லி,சொக்கி இப்படி அவர் படத்தோட நாயகிகள் பெயர் மட்டுந்தான் நம்ப மனசுல நச்சுன்னு பதிஞ்சிருக்கு. 'நச்சு'ன்னா விஷமா விரவி இருக்கு. ஆனா எந்த நாயகன் பேராவது ஞாபகத்தில இருக்கா? இருக்காது. இருக்கவும் விட மாட்டாரு.

    முதல்ல ஹீரோவை சப்பாணி ஆக்கிடுவாரு... முடிவுல அவனை ஜெயிலுக்கு அனுப்பிடுவாரு. அந்த ஆளே கமலா கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு வந்தாலும் ஜெயிலுக்குதான் அனுப்புவாரு சிகப்பு ரோஜாக்கள்-ல! அதுலயும் சுதாகர் மாதிரி இளிச்சவாயன் கிடைச்சிட்டா கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி கழுத மேல ஏத்தி கேவலப்படுத்திடுவார். எதனாலன்னா?எல்லா ஹீரோயினுக்கும் ஒட்டு மொத்த குத்தகைகாரரான ஹீரோ அவருதான்!

    பானை பொதுவா செம்மண் கலர்ல இருக்கும். ஆனா இந்த அழைப்பிதழ்ல கார்த்திகா வெண்ணை கடையிர பானையோட கலரப் பாருங்க கருப்பா இருக்கு... அப்படியே பாரதிராஜா கலரைப் பாருங்க...

    ஆக கடையப்படுறது பாரதிராஜா மனசு. கடையிறது கார்த்திகா இல்லே காதல்! இந்தப் படத்திலயும் இப்படி காதல கடைஞ்சா ரசிகர்கள் நொறைத் தள்ளி நிக்கப்போறாங்க. கார்த்திகா கண்ணாலேயே ரசிகர்கள் மனசை வேற கடையப் போறாங்க. கடைஞ்சிட்டு அவுங்க ஹிந்திக்கு போய்டுவாங்க. அம்மாவாவது மும்பைக்குதான் போனாங்க... சரி மும்பைக்கு அவுங்க போகட்டும்.

    நாம மதுரைக்கு வருவோம்.

    மதுரைய மீட்டது சுந்தர பாண்டியனா இருக்கலாம்,ஆண்டது ஆயிரம் ராஜாவா இருக்கலாம் ஆனா காட்டினது-சினிமாவுல... இந்த மண் வாசனைய ஊட்டினது இந்த பாரதிராஜாதான். ஒரு பா.ராஜாவிடமிருந்து ஒரு பாக்கியராஜா.. அந்த பாக்கியராஜாவிடமிருந்து 100 பார்த்திபன்கள் இப்படி நீ உருவாக்குனவங்க தான் இன்றைய சினிமாவுல. அதனால ஒரு மூதாதையரா உன்ன வணங்குறோம்.

    வேஷ்டி விளம்பரத்தில சரத் குமார் நடிக்கலாம், சட்டை விளம்பரத்தில சத்யராஜ் நடிக்கலாம் ஆனா ஜீன்ஸ் விளம்பரத்தில நடிக்க தகுதியான ஒரே ஆளு நம்ம பாரதிராஜாதான்.

    இந்த வயசுலயும் என்ன மிடுக்கா இருக்காரு பாருங்க.. வெளிப் பார்வைக்கு இவரும் ஒரு அஞ்சாநெஞ்சன்தான். ஆனா நெருங்கி பாத்தா பாசக்காரப்பய... இந்த பாசத்திற்குரிய பாரதிராஜா. பாசம் பாசம் முழுக்க பாசம். அந்த பாசத்தில வழுக்கி விழுந்தவங்கதான் நாங்க எல்லாம்.

    எழ விரும்பாம விழுந்தே கிடக்கிறோம் அடிமைகளா!

    அவருக்கு வீட்டுல பிரச்சனை வரும் போதெல்லாம் த(ண்)னி பட்ட முறையில முறையிடுவாறு.. "ஒரு சராசரி மனிஷனுக்கும் இந்த பாரதிராஜாவுக்கும் ஒரு வித்தியாசமே இல்லையா? எவ்வளவு சாதனை பண்ணி இருக்கேன்... எனக்கொரு சலுகை இல்லையா"ன்னு.

    உங்களுக்கு மட்டும் ஒரு விசேஷ சலுகையை நாங்க குடுக்குறோம். அது என்னன்னா...

    கண்ணதாசன் சொன்ன,
    "வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ?"
    அதுல அந்த கடைசி வரையா நாங்க இருப்போம் சார். நாங்க இருப்போம்.

    நாங்கன்ன nothing but சினிமா.

    இன்னும் சொல்லப் போனா இனிமே உங்களுக்கு தனிப்பட்ட முறையில மரணமே இல்லே! ஏற்கனவே உங்கள எங்க இதயத்துக்குள்ள பொதச்சிக்கிட்டோம்/விதைச்சிக்கிட்டோம்!

    எங்கள் நினைவு தவறும் வரை உங்கள் நினைவும் தவறாது. அது சரி உங்கள் மேடையில் நான் ஏன் வாழ்த்தவேண்டும்?

    உங்களை சார்ந்த இத்தனை சாதனையாளர்கள் உள்ள இந்த பெருங்கடலில் நான் ஒரு பெருங்காயம். பெருங்காயம்!

    என்னை அழைத்தது உங்கள் பெருந்தன்மை-பேராண்மை. இமயமே! உங்களுக்கு ஒரு
    இதயத்தின் நன்றி..," என்றார்.

    பாரதிராஜா நெகிழ்ச்சி

    பார்த்திபனின் இந்த பேச்சால் நெகிழ்ந்த பாரதிராஜா கூறுகையில், ""இந்த படத்துல நடிக்க வேண்டிய பார்த்திபனை ஒரு வார்த்தை கூட அவன் கிட்ட சொல்லாம மாத்திட்டேன். ஆனா அவன் அதை பத்தி ஒரு வார்த்தை கூட இந்த மேடையில பேசாம என்ன பெருமைப்படுத்தி பேசிட்டு போய்ட்டான். இப்ப நான்தான் குற்ற உணர்ச்சியில இருக்கேன்," என்றார்.

    English summary
    Actor - Director Parthiban says that director Bharathiraja is like the Taj Mahal of Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X