'தாங்க மாட்டீங்க': கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அன்றே சொன்ன பாரதிராஜா
சென்னை: கமல் ஹாஸன் பற்றி அன்றே பாரதிராஜா சொன்னது இன்று நடக்கிறது.
விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாமல் உலக நாயகன் கமல் ஹாஸன் திண்டாடியதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போதைய மாநில அரசால் பிரச்சனையை சந்தித்த அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியது தான் என்றார்.
பின்னர் ஒரு வழியாக படம் ரிலீஸானது அனைவருக்கும் தெரியும்.

கமல்
ட்விட்டரில் அரசியல் பேசி வந்த கமல் ஹாஸன் களத்தில் குதிக்க முடிவு செய்துவிட்டார். இந்த மாத இறுதியில் அவர் அரசியல் கட்சியை துவங்க உள்ளாார்.

கட்டாயம்
விரும்பி வரவில்லை மாறாக கட்டாயத்தால் அரசியலுக்கு வருகிறேன் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். நடிப்பவருக்கு அரசியல் வருமா என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

ஆதரவு
கமல் ட்விட்டரில் அரசியல் பேசியபோதே பல விமர்சனங்கள் வருகிறது. அவரது ரசிகர்களோ நீங்க வாங்க ஆண்டவரே பார்த்துக்கலாம். நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள்.

பாரதிராஜா
விஸ்வரூபம் பட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது பாரதி ராஜா கூறியதாவது, கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுசா கத்துக்கிட்டு வருவான். தாங்க மாட்டீங்க என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











