"மை டியர் ஸ்வீட்" தமிழ் மக்களே.. உங்கள் பாரதிராஜாவின் "டிபரன்ட்" நடிப்பில்.. மீண்டும் ஒரு மரியாதை!

சென்னை : பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள மீண்டும் ஒரு மரியாதை படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகரான பாராதிராஜா நடித்து கதை எழுதி இயக்கி இருக்கும் படம் தான் மீண்டும் ஒரு மரியாதை .இந்த படத்தில் பாராதிராஜா மற்றும் மௌனிகா தாத்தா பாட்டியாக நடித்து உள்ளனர். மேலும் ராசி நட்சத்திரா மற்றும் ஜோ மல்லூரி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் .

Bharathiraja win Meendum Oru Mariyadhai Sneak Peek out

மீண்டும் ஒரு மரியாதை படம் வரும் பிப்ரவரி 21 வெளியாக உள்ளது. இதனையொட்டி படத்தின் ஸீனீக் பீக் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மனோஷ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

தற்போது வெளியாகியுள்ள ஸீனீக் பீக்கில் தாத்தா பாட்டியின் அரவணைப்பும் அன்பு புரியாத அமெரிக்காவில் வாழும் பேரன் பேத்திகள் போலீஸுக்கு புகார் சொல்ல குழந்தைகள் நல காவல் துறை பாட்டியான மௌனிகாவை கைது செய்கிறது . இந்த மூன்றரை நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது .

Bharathiraja win Meendum Oru Mariyadhai Sneak Peek out

பாராதிராஜா கடைசியாக கென்னடி கிளப் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு தற்போது இந்த படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் முழுக்க அமெரிக்காவில் எடுக்கபட்டுள்ளது. இது இந்த படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதே நமக்கு தெரிந்திருக்கும் .

மேலும் படத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகள் பல்வேறு விதமாக இருப்பது தெரிகிறது. பாராதிராஜா வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பதும் தெரிகிறது. முன்னோட்டத்தில் பல துப்பறியும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது .

Bharathiraja win Meendum Oru Mariyadhai Sneak Peek out

பாராதிராஜா கடைசியாக 2013ல் அன்னக்கொடி படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்திற்கு பிறகு 7வருடங்களுக்கு கழித்து இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடித்தும் இருப்பது முக்கியமான விசயம் .

இந்த படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் பாடல் அமைத்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் ,யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷரன் சூர்யா ஆகியோர் ஆவர். படத்திற்கு பின்னணி இசையை அமைத்துள்ளனர் சுபேஷ் மற்றும் முரளி .

மரியாதை என்ற பெயரில் பாரதிராஜா இதற்கு முன்பே முதல்மரியாதை படத்தை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் ஒரு மரியாதை என்று இந்த படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார். படம் வரும் பிப்ரவரி 21 வெளியாகுகிறது. நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜா படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X