உனக்கும், உன் இசைக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துக்கள்டா.. இளையராஜாவை வாழ்த்திய பாரதிராஜா!

சென்னை: இசைஞானி இளையராஜா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

Ilayaraja Birthday special | Best BGMs of Ilayaraja | Happy Birthday Ilayaraja

இளையராஜாவின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இசை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இசை உலக கடவுளை சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

தேதி மாற்றம்

தேதி மாற்றம்

1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக அவரது பிறந்தநாளில் தானும் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என ஒரு நாள் முன்னதாக ஜூன் 2ம் தேதி தனது பிறந்தநாளை பல ஆண்டுகளாக கொண்டாடி வருகிறார்.

இசைஞானி

இசைஞானி

தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக இளையராஜா திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதிலும் இந்த இசை ஞானியின் இசைக்கு அடிமையாகி கிடப்பவர்கள் பல கோடி பேர் உள்ளனர். இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட திரை பிரபலங்களும் இசை ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துக்கள்டா

வாழ்த்துக்கள்டா

உனக்கும்,

உன் இசைக்கும்,

நம் உறவுக்கும்,

என்றும் வயதில்லை

வாழ்த்துக்கள்டா. #Ilaiyaraaja

உயிர்த் தோழன்

பாரதிராஜா." என நெகிழ்ச்சியான கவிதையை எழுதி தனது ஆருயிர் நண்பர் இளையராஜாவை வாழ்த்தி உள்ளார்.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

16 வயதினிலே படத்தின் மூலம் தொடங்கிய நட்பு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. விரைவிலேயே மீண்டும் இணைந்து இருவரும் படம் பண்ண உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்புகள் வெளியாகின. கொரோனா பரவல் காரணமாக அந்த படைப்பு இன்னும் ஆரம்பிக்காமலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: ilayaraja barathiraja
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X