»   »  பாரதிராஜா Vs

பாரதிராஜா Vs

Subscribe to Oneindia Tamil

திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாரதிராஜாவின் உதவியாளர் வி.ஜெயப்பிரகாஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பெண்கள் கற்பு பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவை கண்டிப்பவர்கள் தான் உண்மையான தமிழர்களா? என்று இயக்குநர்பாரதிராஜா பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார்.

இதைக் கண்டித்து சில வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாராதிராஜாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால்பாரதிராஜாவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களின் தொழில் தர்மத்துக்கு எதிரான இச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றபதிவாளரிடம் டிசம்பர் 5ம் தேதி புகார் கொடுத்தேன். இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பாரதிராஜாவின் உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil