'கத்துக்குட்டி'யில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜும் நடிக்கிறார்!

By Shankar

கத்துக்குட்டி என்ற படத்தில் நடிகராக களமிறங்குகிறார் தயாரிப்பாளரும் பாரதிராஜாவின் தம்பியுமான ஜெயராஜ்.

பாரதிராஜாவின் சொந்தப் படங்களுக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர் ஜெயராஜ். பாரதிராஜாவின் சகோதரர் இவர்.

இரா சரவணன் என்பவர் முதல் முறையாக இயக்கும் கத்துக்குட்டி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஜெயராஜ்.

Bharathirajaa's brother make debut as actor in Kathukkutty

இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பவர் நரேன். முழுக்க முழுக்க காமெடிக் கதையான இந்தப் படத்தை இயக்கும் சரவணன், யாரிடமும் உதவி இயக்குநராகக் கூட இருந்ததில்லையாம்.

ஒரு முறை பாரதிராஜா அலுவலகத்தில், ஜெயராஜைப் பார்க்க, உடனே தன் படத்தில் அவரை நடிக்கக் கேட்டாராம்.

ஆனால் இந்த வாய்ப்பை ஜெயராஜ் முதலில் ஒப்புக் கொள்ளவில்லையாம். தொடர்ந்து சரவணன் வற்புறுத்த, ஸ்க்ரிப்டை வாங்கி பாரதிராஜாவிடம் கொடுத்து, அவர் படித்துப் பார்த்து ஓகே சொன்ன பிறகுதான் நடிக்க சம்மதித்தாராம்.

'எல்லாம் சரி, ஆனா, எனக்கு நடிப்புனா என்னன்னே தெரியாதே...'னு தயங்கினாராம் ஜெயராஜ். அதற்கு இயக்குநர் சொன்ன பதில் - 'சும்மா வாங்க சார்... எனக்கு மட்டும் டைரக்ஷன்னா என்னன்னு தெரியுமா என்ன?' ''

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X