இவங்க ஆட்டத்திலே இல்லையே.. காணாமல் போன நடிகை வேறமாதிரி ரீ என்ட்ரி.. பெரிய இடத்து சிபாரிசு போல!

சென்னை: சினிமாவில் ஆள் அட்ரஸ் தெரியாமல் இருந்த சுகன்யா தற்போது சினிமாவில் ரீ என்ட்ரியாகி உள்ளார்.

புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுகன்யா. கார்த்திக், கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் தமிழைத் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சுகன்யா: 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கிய சுகன்யா, சின்னக் கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ்ப்பாட்டு , சோலையம்மா, சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல், கேப்டன், சீமான்,மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், இந்தியன் என பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார்.

Bharathirajas heroine actress sukanya re entry in malayalam movie

விவாகரத்து பெற்றார்: இதையடுத்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு நியூஜெர்சியில் குடும்பம் நடத்தினார். ஆனால், கணவர் பல கட்டுப்பாடுகளை விதித்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஓராண்டுக்குள் கணவரை விட்டுபிரிந்து இந்தியா வந்தார்.

சீரியலில்: விவாகரத்திற்கு பின் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார், ஆனால், படவாய்ப்பு இல்லாததால், சன் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்தார். மேலும், சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவில் காணாமல் போன நடிகையாக இருந்த சுகன்யா இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Bharathirajas heroine actress sukanya re entry in malayalam movie

ரீ என்ட்ரி: இந்நிலையில், சுகன்யா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஆனால் இந்த முறை நாயகியாக இல்லாமல் பாடலாசிரியராக அறிமுகமாக உள்ளார். மலையாள படமான DNA படத்தின் தமிழ் காட்சிகள் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ் பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும் சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, சுகன்யா அந்த படத்தில் பாடல் ஒன்றை எழுதி பாடலாசிரியராக மாறி உள்ளார்.

மகிழ்ச்சி அடைகிறேன்: இதுகுறித்த சுகன்யா பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. அதில், எத்தனையோ பாடல் ஆசிரியர் இருக்கும் போது, இயக்குனர் சுரேஷ் பாபு, இசையமைப்பாளர் சரத் என்னை பாடல் எழுத சொன்னதை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன். இந்த பாடல் உண்மையில் நன்றாக வந்துள்ளது. நானே பலமுறை கேட்டேன், DNA படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன் என பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X