Manoj Family photo: மறைந்த மனோஜின் அழகான குடும்ப போட்டோ.. மீளா துயரத்தில் மனைவி
சென்னை: இயக்குநர் இமயம் என பாரதிராஜாவை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடி வருகிறது. இவரால் அறிமுகமான நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவில் இன்று வரை தவிர்க்க முடியாத நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், பாரதிராஜாவால், தன் மகன் மனோஜை சோபிக்க வைக்க முடியவில்லை. இது அவரின் பெரிய கவலை மட்டுமில்லாமல் மனோஜின் கவலையாகவும் இருந்தது.
மனோஜ் அண்மையில் கொடுத்திருந்த பேட்டியில் கூட, பாரதி ராஜா மகன் என்பதால், எனக்கு நிறைய பாசிட்டிவான விஷயமும் நடந்து இருக்கு, நெகட்டிவான விஷயதும் நடந்து இருக்கு. சிலர் உனக்கு என்னப்பா பாரதி ராஜா பையன் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது தான் மிகப்பெரிய வேதனை, சொல்லுபவர்கள் ஆயிரம் விஷயத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார்கள் உண்மையில் அதன் வலியை யாரும் புரிந்து கொள்வது இல்லை என்றார்.

மனோஜ் திடீர் மறைவு: நடிகர் மனோஜூக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த மனோஜ் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் சென்னை, நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரன் நகரில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குடும்ப போட்டோ: மனைவி மற்றும் மகள்கள் மீது ஆதித அன்பு வைத்திருந்த மனோஜ், என் வாழ்க்கையில் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் எனக்கு உறுதுணையாக, என்னுடைய கஷ்டத்தை தாங்கிக் கொண்டு எனக்கு ஆறுதலாக இருந்தது என்னுடைய மனைவியும், என்னுடைய குழந்தைகளும் தான். அவர்கள் மட்டும் இல்லை என்றால், நான் என்றைக்கோ மன அழுத்தத்திற்கு சென்று இருப்பேன் என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

அழகான குடும்பம்: நடிகர் மனோஜின் மனைவி நந்தனாவும் ஒரு நடிகையாவார். இவர்கள் இருவரும், சாதூர்யன் படத்தில் நடித்த போது காதலித்ததைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது மனோஜ் உயிரிழந்த நிலையில், மீளா துயரத்தில் மனைவி கண்ணீருடன் நிற்கிறார். இந்த நேரத்தில் இணையவாசிகள் பலர், மனோஜின் அழகிய குடும்ப போட்டோவை இணையத்தில் பகிர்ந்து, இந்த குடும்பத்தைவிட்டு போக எப்படி மனம் வந்தது என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











