பரத்துக்கு கம்பேக் படமா அமையுமா?.. காளிதாஸ் 2 டிரைலர் ரொம்ப ஷார்ப்பா இருக்கேப்பா!

சென்னை: நடிகர் பரத்துக்கு கடைசியாக நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த காளிதாஸ் படத்தின் 2ம் பாகம் 'காளிதாஸ் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் நடிகர் பரத் காவல்துறை அதிகாரியாக, காணாமல் போன ஒரு பெண் மற்றும் திரையரங்க கொலை வழக்கின் விசாரணையில் ஈடுபடுவது காட்டப்படுகிறது.

நடிகர் பரத்துடன், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஸ்ரீ செந்திலும் இப்படத்திற்காகத் திரும்பியுள்ளார். 'குற்றம் மற்றும் தண்டனை' என்ற டேக்லைனுடன் வரும் இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், கிஷோர், சங்கீதா, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Bharath s Kaalidas 2 Trailer looks gripping and promising Thriller
Photo Credit:

விஜய்யுடன் பூவே உனக்காக படத்தின் மூலம் பிரபலமான நடிகை சங்கீதா பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் காளிதாஸ் 2 படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

மேலும், சுரேஷ் மேனன், அனந்த் நாக், ராஜா ரவீந்திரா, அபர்ணதி, சிங்கம் ஜெயவேல், டி.எம். கார்த்திக் போன்றோரும் துணை வேடங்களில் இணைந்துள்ளனர்.

'காளிதாஸ் 2' முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல, தனித்த திரைப்படம் என இயக்குநர் ஸ்ரீ செந்தில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெளிவுபடுத்தினார். அவர் கூறியதாவது, "ஒரு போலீஸ் அதிகாரியை மையப்படுத்தி வேறு ஒரு க்ரைம் த்ரில்லர் செய்ய விரும்பினேன். புதிய கதாபாத்திரத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, காளிதாஸையே கொண்டுவரலாமே என்று நினைத்தேன்."

ட்ரெய்லரின்படி, இப்படம் ஒரு 'யார் குற்றவாளி?' பாணி திரைப்படம் எனத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடந்தது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, எடிட்டர் புவன் சீனிவாசன், சண்டைப் பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 'காளிதாஸ் 2' திரைப்படம் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் பரத்துக்கு காளிதாஸ் 2 திரைப்படம் வெற்றிப்படமாக அமையுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். லெஜண்ட் சரவணாவின் லீடர் திரைப்படமும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK திரைப்படம் ஏப்ரல் 3 ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த 2 படங்களும் ஒரு வாரம் தள்ளி வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X