வீட்டில் கஞ்சா சிக்கிய வழக்கு.. கணவருடன் கைதான பிரபல காமெடி நடிகை ஜாமீனில் விடுவிப்பு!
மும்பை: போதைப் பொருள் வழக்கில் கணவருடன் கைது செய்யப்பட்ட காமெடி நடிகை ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளார்.
இந்தி சினிமாவில் போதைப்பொருள் தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக நடிகை ரியா சக்கரவர்த்தி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஷ்ரத்தா கபூர்
தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகிய நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிஸிடம் விசாரணை நடத்தினர். அவர் தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸ் கைது செய்யப்பட்டார்.

ஷபானா சயீத்
சமீபத்தில், பாலிவுட் தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கிராம் மாரிஜுவானா கைப்பற்றப்பட்டது. பிரோஸ் நதியத்வாலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

நகைச்சுவை நடிகை
இந் நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை லோக்கண்ட்வாலா பகுதியில் உள்ள நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து 86.5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நீதிமன்றம் ஜாமீன்
பின்னர் பாரதி சிங் கைது செய்யப்பட்டார். அவர் கணவரும் கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதால் அவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர்களுக்கு மும்பை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை அடுத்து, விடுவிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











