வீட்டில் போதைப் பொருள்.. பிரபல காமெடி நடிகை கணவருடன் அதிரடி கைது.. பரபரக்கும் திரையுலகம்!
சென்னை: போதைப் பொருள் வழக்கில், பிரபல காமெடி நடிகை, கணவருடன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி திரையுலகினர் மற்றும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸ்
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ரியா சக்கரவர்த்தி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகிய நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து நடிகர்
அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் (Gabriella Demetriades) தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போலீசார் கைது செய்தனர்.

10 கிராம் மாரிஜுவானா
சமீபத்தில், பாலிவுட் தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கிராம் மாரிஜுவானா கைப்பற்றப்பட்டது. பிரோஸ் நதியத்வாலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

நகைச்சுவை நடிகை
இந்தநிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை லோக்கண்ட்வாலா பகுதியில் உள்ள நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பறிமுதல்
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, 'போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து பாரதி சிங் வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு 86.5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறினார்.

ஒப்புக் கொண்டனர்
வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பாரதி சிங் கைது செய்யப்பட்டார்.

ஹர்ஷ் லிம்பாச்சியா
அவரும், அவரது கணவரும் கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று காலை பாரதி சிங்கின் கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியாவும் கைது செய்யப்பட்டார். இதை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











