அரவிந்த்சாமி, அமலாபால் நடிக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' - டிசம்பர் ரிலீஸ்!
சென்னை : சித்திக் இயக்கத்தில் உருவாகும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் நைனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
மம்முட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை தமிழ், தெலுங்கு என பல மொழிகளின் ரீ-மேக்கையும் தானே இயக்கவிருப்பதாக இயக்குநர் சித்திக் கூறி இருந்தார்.

ரஜினி நடிப்பில்..?
தமிழில் மம்முட்டி கதாபாத்திரத்தில் ரஜினி, அஜித் உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ரஜினி இப்படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிறகு, தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடிப்பது உறுதியானது.

அமலா பால்
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டது. ஆச்ஷன் மற்றும் காதல் கலந்த கதையாக உருவாகியுள்ளது இந்தப் படம். நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடித்திருக்கிறார்கள். 'தெறி' படத்தைத் தொடர்ந்து மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ள படம் இதுவாகும்.

அர்விந்த்சாமி
'சதுரங்க வேட்டை 2' மற்றும் செல்வா இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்த அரவிந்த்சாமி, அதனைத் தொடர்ந்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. நாசர், சூரி, ரோபோ சங்கர் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் மாற்றம்
மலையாளத்தில் வெளியான படத்தை அப்படியே தமிழில் எடுக்காமல் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப திரைக்கதையில் சில மாறுதல்களைச் செய்து உருவாகியிருக்கிறதாம் இந்தப் படம். இந்தப் படத்திற்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

டிசம்பர் ரிலீஸ்
இந்தப் படத்தின் பாடல்கள் இந்த மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. டிசம்பர் மாதம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











