Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் தள்ளிப்போன 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் - காரணம் என்ன?
Recommended Video
சென்னை : சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால், தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் மே 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
'பாஸ்கர் தி ராஸ்கல்' மலையாள படத்தின் ரீமேக்கான படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. பொங்கலின்போது ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட படம் வெவ்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளிப்போனது. சினிமா ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடந்து ஏப்ரல் 27 (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. 'தியா' 'பக்கா', 'பாடம்', ஹாலிவுட்டின் 'தி இன்ஃபினிட்டி வார் : அவெஞ்சர்ஸ்' ஆகிய படங்கள் நாளை வெளியாகவிருக்கின்றன. ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் படம் தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் நாளை வெளியாகவிருந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மே 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படங்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.