லாக்டவுன்ல இது அதிகரிக்குதே.. பேஸ்புக்கில் தனது பெயரில் போலி கணக்கு.. எச்சரித்த பிரபல ஹீரோயின்!

By

சென்னை: பேஸ்புக்கில் தனது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

SOCIAL TRENDING VIDEOS | EP-02 | MAY-06 | MEDIA MAHADHI |FILMIBEAT TAMIL

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

சிவராஜ்குமார்

சிவராஜ்குமார்

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை அங்கு பெறவில்லை. இதையடுத்து சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லாக்டவுன்

லாக்டவுன்

மேலும், இன்ஸ்பெக்டர் விக்ரம் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களிலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா, அடிக்கடி ஏதாவது தகவல்களையும் தனது புகைப்படங்களை பதிவு செய்துவருகிறார்.

பேஸ்புக் பக்கம்

பேஸ்புக் பக்கம்

இந்நிலையில் தனது பெயரில் போலி பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளர். பேஸ்புக்கில் நான் இணையவில்லை, என் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் அதை பின் தொடர வேண்டாம் என்று எச்சரித்துள்ள அவர், இந்த போலி பக்கம் தொடர்பாக புகார் அளிக்கும்படியும் தனது ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

புகார் அளிக்கவும்

புகார் அளிக்கவும்

அந்த லிங்கை இணைத்துள்ள அவர், 'நான் பேஸ்புக்கில் இல்லை. இது எனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி பேஸ்புக் பக்கம். இதுபற்றி புகார் அளிக்கவும்' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சிலர் புகார் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் பெயரில் போலி பேஸ்புக் கணக்குகள் பல தொடங்கப்பட்டுள்ளன.

அதிகரித்து வருகிறது

அதிகரித்து வருகிறது

இதுபற்றி ஏற்கனவே பல நடிகைகள் புகார் அளித்திருந்தனர். இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகைகளின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகைகள் ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், ஊர்மிளா ரவ்தெலா, ஸ்வாதி உட்பட சில நடிகைகளின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் நடிகை பாவனாவும் தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு இருப்பதைப் பற்றி எச்சரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X