ஒரே கூத்து தான்.. புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடிய பாவனா, சாம்.. பறந்து வந்த ஷூ.. செம வைரல் வீடியோ!

சென்னை: பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனும் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் இணைந்து இந்த லாக்டவுனில் தொடர்ந்து டான்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.

இருவரும் இணை பிரியாத தோழிகள் என்பதால் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புட்ட பொம்மாவுக்கு நடனமாடும் வீடியோவில் அவர்கள் மேல் ஷூ ஒன்று பறந்து வந்து விழும் வீடியோ வைரலாகி வருகிறது.

அக்கா தங்கச்சியா

அக்கா தங்கச்சியா

பாவனா பாலகிருஷ்ணனும் சம்யுக்தாவும் இணை பிரியாத தோழிகளாக ஏகப்பட்ட போட்டோக்களையும், நடன வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒரே மாதிரி இருவரும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இருவரும் அக்கா தங்கச்சியா என கேள்வி எழுப்ப, சொந்த அக்கா தங்கச்சி இல்லை. நாங்க ரெண்டு பேருமே நண்பர்கள். அக்கா தங்கச்சின்னு வச்சிக்கலாம் என பதில் அளித்து அசத்தினர்.

ஒரே டான்ஸ் தான்

ஒரே டான்ஸ் தான்

இருவருக்கும் டான்ஸ் என்றால் மிகவும் உயிர். அடிக்கடி இணைந்து நடனமாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மேக்ஸ் அன்பை பெற்ற சம்யுக்தாவும் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதால் மீண்டும் வீட்டிற்குள் முடங்கிய பாவனாவும் இணைந்து ஆடும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Recommended Video

Actor Sathish Tribute to Thalapathy Vijay | அப்படி போடு - வாத்தி Coming
புட்ட பொம்மா பாட்டுக்கு

புட்ட பொம்மா பாட்டுக்கு

600 மில்லியன் வியூக்களையும் 4 மில்லியன் லைக்குகளையும் கடந்த அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா பாடலுக்கு சமீபத்தில் இருவரும் நடனமாடிய ரீலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளனர். அந்த வீடியோ நடன வீடியோவாக இல்லாமல் நகைச்சுவை வீடியோவாக மாறி செம வைரலாகி வருகிறது.

பறந்து வந்த ஷூ

பூஜா ஹெக்டே அழகாக ஆடிய புட்ட பொம்மா பாடலை கெடுக்காதீங்கன்னு செம காண்டில் இவர்களை வீடியோ எடுத்து வரும் நபர் ஷூவை தூக்கி எறிந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது போல இருக்கும் அந்த வீடியோவில் இருவரும் கொடுக்கும் ரியாக்‌ஷன் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

குழந்தைன்னு நினைப்பு

குழந்தைன்னு நினைப்பு

இரட்டை ஜடை போட்டுக்கிட்டு தற்போது மேலும், இருவரும் இணைந்து ஆடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன குழந்தைன்னு நினைப்பா என பங்கமாக இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த லாக்டவுனில் இவங்க அலம்பல் தாங்கலப்பா என்றும் பிக் பாஸ் ஜோடிகள் நிறுத்தியதால் வந்த விளைவு என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X