ஜம்பிங்கம்.. பம்பிங்கம்மாம்.. ஒரே மரண பங்கமா இருக்கே.. பாவனா, சம்யுக்தா வெறித்தனம்தான் போங்க!

சென்னை: பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் மற்றும் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா இருவருமே இணைந்து ஆடியுள்ள லேட்டஸ்ட் ஜம்பிங்கம்.. பம்பிங்கம் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே அச்சில் வார்த்தது போல இருக்கும் இருவரும் இணைந்து ஆடும் போது யாரை பார்ப்பது என்றே தெரியாமல் ரசிகர்கள் ஒன்றுக்கு பல முறை அவர்கள் நடனத்தை பார்த்து வருகின்றனர்.

இந்த லாக்டவுனில் ரசிகர்களை கொஞ்சமாவது ரிலாக்ஸ் பண்ண இவர்கள் வெளியிடும் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்கள் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐபிஎல் இல்லை

ஐபிஎல் இல்லை

ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தால் இந்நேரம் அது தொடர்பாக பிசி ஆகி இருந்திருப்பார் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல ஷோக்களுக்கும் இவர் தொகுப்பாளினியாக இருந்து கலக்கி உள்ளார்.

பிக் பாஸ் முடிஞ்சிடுச்சு

பிக் பாஸ் முடிஞ்சிடுச்சு

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிந்த கையோடு சீனியர் மாடல் அழகி சம்யுக்தாவுக்கு விஜய்சேதுபதியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லாக்டவுன் காரணமாக புதிதாக எந்தவொரு படங்களிலும் கமீட் ஆகாத சம்யுக்தா தனது தோழி பாவனாவுடன் அடிக்கடி நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஜம்பிங்கம் பம்பிங்கம்

ஜம்பிங்கம் பம்பிங்கம்

கடந்த 2012ம் ஆண்டு பிருத்விராஜ், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான அய்யா படத்தில் இடம்பெற்ற ட்ரீமும் வேக்கப்பும் என்கிற பிரபலமான பாடலுக்கு தற்போது சம்யுக்தாவும் பாவனாவும் வேற லெவல் குத்தாட்டம் போட்டுள்ளனர். அவர்கள் நடனமாடிய அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சேலையும் ஜாக்கெட்டும்

சேலையும் ஜாக்கெட்டும்

நீல நிற சேலை மற்றும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு பாவனா பாலகிருஷ்ணன் அழகாக இருக்க அவருக்கு அப்படியே டஃப் போட்டிக் கொடுக்கும் வகையில் மஞ்சள் நிற சேலை மற்றும் நீல நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு சம்யுக்தாவும் செம குத்து குத்துகிறார்.

ட்வின்ஸா

ட்வின்ஸா

பாவனா பாலகிருஷ்ணன் மற்றும் சம்யுக்தா எப்போது இணைந்து வீடியோ போட்டாலும், கமெண்ட் செக்‌ஷனில் ரசிகர்கள் நீங்கள் இருவரும் அக்கா தங்கையா என்றும் ட்வின்ஸா என்றுமே கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், தாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதையும் அடிக்கடி ரசிகர்களுக்கு பதிலாக இருவரும் அளித்து வருகின்றனர்.

என்னவொரு எனர்ஜி

இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இந்த வயதிலும் என்னவொரு எனர்ஜியில் இப்படி டான்ஸ் ஆடுறீங்களே என ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். லாக்டவுன் போரிங்கில் உங்கள் நடன வீடியோக்கள் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுக்கிறது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பாலா மற்றும் சாம் உங்களின் இந்த சேவை தொடரட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X