பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு.. ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி!
சென்னை: பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, ஐபிஎல் போட்டிகளுக்கான வர்ணனைப் பணியிலிருந்து திடீரென விலகியுள்ளார் பாவனா பாலகிருஷ்ணன்.
Recommended Video
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தொகுத்து வழங்கி
பரத நாட்டிய கலைஞரான இவர், நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கிறார். இப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது. அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார், பாவனா.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

பிக் பாஸ் கிண்டல்
சமீபத்தில் கூட பாடல்கள் உருவாக்கி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியை கிண்டலடித்து பதிவு வெளியிட்டு இருந்தார். 'நான் 50 நாட்களுக்கு மேலாக ஐபிஎல்-லுக்காக குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறேன்.

எவ்வளவு அபத்தம்?
ஆனால், நான் அழுவதில்லை, எமோஷன் ஆவதில்லை. அல்லது அனைவரையும் என் அம்மா, அக்கா என்று கூச்சலிடுவதில்லை. இங்கு உண்மையான, நெருங்கிய நண்பர்கள் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், 3 வாரங்களில் இப்படிம் செய்வது எவ்வளவு அபத்தமானது? என்று கூறி இருந்தார்.

வர்ணனைப் பணி
இந்நிலையில், தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் வர்ணனைப் பணியிலிருந்து பாவனா பாலகிருஷ்ணன் விலகியுள்ளார். இதுதொடர்பாக பாவனா, தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

கனத்த இதயத்துடன்
'தனிப்பட்ட காரணங்களுக்காக, கனத்த இதயத்துடன், ஐபில் தொடரிலிருந்து விலகுகிறேன். என்னுடைய பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே மகளாக, மற்ற எல்லாவற்றையும் விட நான் சென்னையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாவனாவுக்கு ஆறுதல்
நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் டிவி டிடி உள்பட பலர் பாவனாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருங்கள் என்றும், ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும்படியும் பலர் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











