கல்யாணமாகி 10 வருஷம் ஆகுது.. குழந்தை பற்றி கேட்டதற்கு பிரபல தொகுப்பாளினி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பிரபல தொகுப்பாளினிக்கு திருமணமாகி 10 வருஷம் ஆகிறது என்பதே பல ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

இந்நிலையில், உங்களுக்கு குழந்தை இருக்கா என கேட்ட ரசிகருக்கு அவர் சொன்ன பதில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என கலக்கி வரும் பாவனா பாலகிருஷ்ணன் தான் அந்த தொகுப்பாளினி.

பிரபல தொகுப்பாளினி

பிரபல தொகுப்பாளினி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் பாவனா பாலகிருஷ்ணன். டிடி நீலகண்டன், பிரியங்காவை போலவே இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் எப்போதுமே டச்சில் உள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

ஸ்டார் விஜய்யில் இருந்து அப்கிரேட் ஆகி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தொகுப்பாளினியாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் குறித்து பேசி வருகிறார் பாவனா பாலகிருஷ்ணன். பாவனா பாலகிருஷ்ணன் சில ஆல்பம் பாடல்களையும் உருவாக்கி உள்ளார். நடனமாடுவது, ஹாட்டாக போஸ் போடுவது என கலக்கி வருகிறார்.

சம்யுக்தாவின் தோழி

சம்யுக்தாவின் தோழி

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொண்ட சம்யுக்தாவும் இவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து ஆடிப் பாடிய வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்துள்ளார் பாவனா பாலகிருஷ்ணன்.

10 ஆண்டுகள் ஆகிறது

10 ஆண்டுகள் ஆகிறது

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் ஒரு ட்ரூ ஆர் ஃபால்ஸ் கேள்வி பதில் விளையாட்டை விளையாடியுள்ளார் பாவனா பாலகிருஷ்ணன். அப்போது அவரிடம் உங்களுக்கு திருமணம் ஆனதா என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இந்த ஆண்டு டிசம்பர் வந்தால் எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடையப் போகுது எனக் கூறி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

குழந்தை இருக்கா

குழந்தை இருக்கா

இன்னொரு ரசிகர் உங்களுக்கு குழந்தை இருக்கிறது என கமெண்ட் செய்ய, எனக்கு குழந்தை இல்லை எனக்கு ஒரு தம்பி மட்டுமே இருக்கிறான் என தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X