Don't Miss!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- News
திடீர் உடல்நலக் குறைவு! அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன நாஞ்சில் சம்பத்! நலம் விசாரித்த முதலமைச்சர்!
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Technology
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Sports
இனி பும்ரா எதுக்கு? ஐசிசி தரவரிசையில் புது உச்சம் தொட்ட முகமது சிராஜ்.. கோலியை முந்திய சுப்மான் கில்
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
'எப்போதும் நீங்கள்தான்..' 3 வது திருமண நாள்.. காதல் கணவருக்கு பிரபல நடிகை டச்சிங் முத்தம்!
சென்னை: மூன்றாவது திருமண நாளை முன்னிட்டு, பிரபல நடிகை தனது கணவருக்கு கொடுத்துள்ள முத்தப் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், பாவனா.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகர், நடிகைகள்
இவருக்கும் கன்னடப் படத் தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் மலர்ந்தது. அவர் தொடர்ந்து காதலித்து வந்த அவர்கள், இருவீட்டு சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் திருமணம் செய்துகொண்டனர். இதில் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கன்னட ரீமேக்
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழைப் போல, அங்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

விரைவில் ரிலீஸ்
இப்போது, சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஹிட்டான பஜராங்கி படத்தின் அடுத்த பாகம் இது. ஹர்ஷா இயக்குகிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் வெளியாக இருக்கிறது.

திருமண நாள்
இந்நிலையில், நடிகை பாவனா தனது மூன்றாவது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், கணவர் நவீனின் மடியில் அமர்ந்தபடி அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தேர்வு செய்தேன்
இதையடுத்து நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, நான் உங்களை தேர்வு செய்தேன். உங்களை தொடர்ந்து மீண்டும் மீண்டும் தேர்வு செய்துகொண்டே இருப்பேன். மூன்றாவது திருமண நாள் வாழ்த்துகள் என்று தனது கணவருக்கு தெரிவித்துள்ளார்.

மலையாள ரசிகர்கள்
இதையடுத்து நெட்டிசன்ஸ் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்துள்ளனர். பலர், நீங்கள் சரியான ஜோடி. உங்கள் படங்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். சில மலையாள ரசிகர்களும் ரசிகைகளும் பாவனாவின் கணவர், நவீனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.