இயக்குனர் மிஷ்கினைக் கவர்ந்த நடிகை இவர்தானாம்... அந்த நடிகை யார் தெரியுமா!

சென்னை: இயக்குனர் மிஷ்கின் மற்ற இயக்குனர்களிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக படங்களை இயக்க கூடியவர்.

பிசாசு வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இப்பொழுது இயக்கி வருகிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் மிஷ்கின் தன்னை மிகவும் கவர்ந்த நடிகை குறித்து பேசியுள்ளார்.

வித்தியாசமான படங்களை

வித்தியாசமான படங்களை

கமர்சியல் எலமெண்ட்கள் சுத்தமாக இல்லாமல் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வித்தியாசமான கதைகளை இயக்கி வருகிறார் இயக்குனர் மிஷ்கின் . தன்னுடைய படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும் வித்தியாசமான படங்களையும் கொடுக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ள மிஷ்கின் சித்திரம் பேசுதடி மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தனி ரசிகர்கள் கூட்டம்

தனி ரசிகர்கள் கூட்டம்

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் வித்தியாசமான சிந்தனையைக் கொண்ட மிஷ்கின் வெற்றி தோல்வி என இரண்டையும் மாறி மாறி கண்டு வருகிறார். சித்திரம் பேசுதடி,அஞ்சாதே, நந்தலாலா,ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ,துப்பறிவாளன் என மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவரின் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

பேய்களை தேவதையாக

பேய்களை தேவதையாக

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் பேய் படங்களிலேயே மிக வித்தியாசமான பேய் படமாக வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பேய் படங்கள் என்றால் மிகக் கொடூரமாக இருக்கும் என்ற எண்ணத்தை உடைத்து பேய்களை தேவதையாகவும் காட்டலாம் என நிரூபித்துக் காட்டியவர் மிஷ்கின். பிசாசு மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்.

சர்ச்சைக்குரிய பல காட்சிகள்

சர்ச்சைக்குரிய பல காட்சிகள்

இதில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து வர விஜய் சேதுபதி, பூர்ணா ,சந்தோஷ் பிரதப், அஜ்மல் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிசாசு 2 படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இடம்பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மிஷ்கினைக் கவர்ந்த நடிகை

மிஷ்கினைக் கவர்ந்த நடிகை

பிசாசு இரண்டு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க தனியாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மிஷ்கின் தன்னுடன் பணியாற்றிய நடிகைகளில் தன்னை மிகவும் கவர்ந்தவர் பாவனா எக்ஸ்ட்ராடிடைரி பர்ஃபமர் சொன்னவுடனேயே செய்து முடிக்க கூடியவர்.. பூர்ணாவும் அதே போல தான் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கற்பூரம் மாதிரி உடனே செய்து முடிப்பார். இப்போது நித்யா மேனன் இவர் பேரல் பேரலா நடிக்க கொடுத்தாலும் சளைக்காமல் நடிச்சிக்கிட்டே இருப்பார் என தன்னைக் கவர்ந்த நடிகைகள் குறித்து மிஷ்கின் மனம் திறந்து கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X