Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பாவனாவின் சர்ப்ரைஸ் என்ட்ரி.. பாகுபலி எஃபெக்ட்டால் அதிர்ந்த சர்வதேச திரைப்பட விழா.. வெல்கம் பேக்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடங்கி உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பாவனா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு நடிகை பாவனா கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் மலையாள படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், மீண்டும் நடிக்கப் போவதாக சமீபத்தில் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், IFFK எனும் கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் அதிரடி என்ட்ரி கொடுத்து குத்து விளக்கை ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
எக்ஸ் கணவர் கால் பண்ணாலும் 'கட்’ பண்றாங்களாம் அந்த விவகாரத்து நடிகை.. என்ன மேட்டர் தெரியுமா?

மீண்டும் மலையாளப் படத்தில்
நடிகை பாவனா கடந்த 2017ம் ஆண்டு கடைசியாக ஆதம் ஜான் என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் காரணமாக மலையாள படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலுமாக விலகினார் பாவனா. பாவனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் குரல் எழுப்பிய நிலையில், தற்போது மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்கப் போகிறேன் என அறிவித்துள்ளார். 'Ntikkakkakkoru Premondarnn' என அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

சர்ப்ரைஸ் என்ட்ரி
மார்ச் 18ம் தேதி கேரளாவில் தொடங்கிய IFFK (International Film Festival Kerala) எனும் கேரளாவின் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இதில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால், நிகழ்ச்சி நிரலில் பாவனாவின் பெயரே இல்லாத நிலையில், சர்ப்ரைஸ் என்ட்ரியாக உள்ளே நுழைய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

பாகுபலி எஃபெக்ட்
பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸ் தளபதியாக பதவியேற்கும் போது ஒட்டுமொத்த மக்களும், படைகளும் செய்யும் முழக்கத்தால் திரையரங்குகள் மொத்தமே அதிர்ந்தது போல பாவனாவின் சர்ப்ரைஸ் என்ட்ரியின் போது ரசிகர்கள் இடைவிடாமல் கரவொலியை எழுப்பி பாவனாவை வெல்கம் செய்திருந்தினர்.

ரோல் மாடல் நீங்க
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நடிகை பாவனா தொடங்கி வைத்த நிலையில், கேரளாவின் கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் பாவானாவை பாராட்டி பேசியிருந்தார். "கேரளாவின் ரோல் மாடல் நீங்க" என அவர் பாராட்டியதற்கு பாவனா நன்றி தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தந்த பேராதரவு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த பாவனா வெல்கம் பேக் பாவனா என பதிவிட்டு டிரெண்டாக்கியுள்ளார்.