Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்த டிரஸ்ல நீங்க அழகோ அழகு... வெட்கத்தில் நாணும் நடிகை!
சென்னை : மலையாள தேசத்தில் பிறந்து இருந்தாலும் இப்பொழுது கர்நாடகத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகை பாவனா.
தமிழில் தீபாவளி,சித்திரம் பேசுதடி, வாழ்த்துக்கள், கிழக்கு கடற்கரை சாலை, வெயில் என எக்கச் சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளவர்.
பூஜா
ஹெக்டேவுக்கு
கொரோனா..
தாமதமாகுமா
தளபதி
65?
அதிர்ச்சியில்
ரசிகர்கள்!
தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் இப்பொழுது கருப்பு டிரஸ்ஸில் அம்சமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிறந்த நடிகை
முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் ரசிகர்களில் ஆல்டைம் பேவரிட் நடிகையாக இருக்கும் நடிகை பாவனா தமிழ் சினிமாவிற்கு சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே சிறந்த நடிகை என பெயர் எடுத்த இவருக்கு அடுத்தடுத்த தமிழ் வாய்ப்புகள் குவிய தொடங்கின.

தமிழ் சினிமாவிற்கு முழுக்கு
கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர்,ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்த இவருக்கு அஜித்தின் அசல் கடைசி படமாக அமைந்தது. இப்பொழுது ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு கன்னடத்தில் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார்.

அடுத்தடுத்து மூன்று
விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற 96 கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய பாவனாவிற்கு இப்பொழுது கைவசம் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

அதே இளமையுடன்
குடும்பப்பாங்கான கதாநாயகி என்ற பெயரெடுத்த இவர் இன்றுவரை அதே நற்பெயர் உடன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் பாவனா இப்பொழுது கருப்பு நிற சுடிதாரில் 1000 வாட்ஸ் பல்பு போல மிளிர முதல் படத்தில் பார்த்தது போலவே இன்றும் அதே இளமையுடன் இருக்கும் இவரைப் பார்த்த ரசிகர்கள் இந்த டிரஸ்ல நீங்க அழகோ அழகு எனக் கூறி வருகின்றனர்.