Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
'சேச்சி, ஒரு ஹாய் தருமோ..' அள்ளும் அழகில் பிரபல நடிகை பாவனா.. வைரலாகும் ஸ்பெஷல் போட்டோஸ்!
சென்னை: நடிகை பாவனா வெளியிட்டுள்ள ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இப்போது கன்னடப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், நடிகை பாவனா.
திருமணத்துக்குப் பிறகு அதிகம் நடிக்காமல் இருந்த பாவனா, இப்போது கன்னட சினிமாவில் பிசி.

காதலில் விழுந்தனர்
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், எதிரி, தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் மலையாள நடிகை பாவனா, தெலுங்கிலும் நடித்திருக்கிறார். கன்னடத்தில் இவர் நடித்த ரோமியோ என்ற படத்தை தயாரித்தவர் நவீன். அப்போது நட்பாக பழகிய நவீனும் பாவனாவும் பின்னர் காதலில் விழுந்தனர்.

எதிர்பார்த்த வெற்றி
பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார் பாவனா. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார்.

கோவிந்தா கோவிந்தா
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விக்ரம், சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2, கோவிந்தா கோவிந்தா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

ஹோம்லி லுக்
அதை ரசிகர்கள் வைரலாக்குவார்கள். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதில் மஞ்சள் உடையில் செம ஹோம்லி லுக்கில் இருக்கிறார் பாவனா. இதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர்.

மகிழ்ச்சி ஆன்மா
இதற்கு கேப்ஷனாக, மகிழ்ச்சியான ஆன்மாதான், இந்த கொடூர உலகத்தின் சிறந்த கேடயம் என்று குறிப்பிட்டுள்ளார். சில ரசிகர்கள், அக்கா ஒரு ஹாய் சொல்லுங்க என்றும் சிலர் சேச்சி ஒரு ஹாய் தருமோ என்றும் கேட்டுள்ளனர். அவர்களுக்கு ஹாய் சொல்லி இருக்கிறார் பாவனா. உங்க கண்கள் அழகா இருக்கு என்று சிலர் கூறியுள்ளனர்.

பிடிக்கலைனு நினைக்கிறேன்
இன்னொரு ரசிகை, என்னை உங்களுக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டேங்கிறீங்களே? என்று வருத்தமாகக் கேட்க, அந்த ரசிகைக்கு ஹாய் சொல்லி, அவரை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார் பாவனா. உங்க ஹஸ்பன்ட் கூட ஒரு போட்டோஷுட் பண்ண வேண்டியதுதானே? என்று கேட்டுள்ளார், இன்னொருவர்.

போட்டோஸ் போடுங்க
இந்த டிரெஸ் கலர் அழகாக இருக்குது என்று சிலரும், ஒவ்வொரு நாளும் அழகாயிட்டே போறீங்க என்று சிலரும் கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்ஸ், நீங்க எந்த டிரெஸ் போட்டாலும் அழகுதான் என்றும் இன்னும் நிறைய போட்டோஸ் போடுங்க என்றும் கேட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.