வளையோசை பாடலுக்கு க்யூட்டாக பர்ஃபார்ம் செய்த பவானிஸ்ரீ.. என்னா லுக்குடா சாமி!
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வரும் விடுதலை-யில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை பவானிஸ்ரீ.
க/பெ ரணசிங்கத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக உருகும் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தவர்.
இப்போது கமல்ஹாசனின் வளையோசை பாடலுக்கு செம க்யூட்டாக பர்ஃபார்ம் செய்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

சாயலும் இல்லாமல்
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போ வில் சென்ற ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்து பவானி ஸ்ரீ அறிமுகமானார். முதல் திரைப்படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

ஜோடியாக பவானி
இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினியாக ஒப்பந்தமாகி வருகிறார்.அதில் முக்கியமாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடந்து முடிந்துள்ளது.

படங்களின் வரிசை
பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படம் மற்றும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என அடுத்தடுத்த படங்களின் வரிசைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் பவானி ஸ்ரீ அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே இப்போது கவர்ச்சி பாதைக்கு மாறி வருகிறார். சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் பட்டையை கிளப்பி வருகிறார்.

ரொமான்டிக் ரீல்ஸ் வீடியோ
இந்த நிலையில் கமல்ஹாசனின் சத்யா திரைப்படத்தில் வரும் வளையோசை கலகல பாடலுக்கு செம க்யூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செம ரொமான்டிக்காக கிளைமேட்டுக்கு தகுந்தமாதிரி ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











