"எங்க நாலு பேரையும் ஒன்னா பாக்குறது ஆச்சர்யம்!" பவதாரிணியால் நெகிழ்ந்த இளையராஜா!

சென்னை: இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி நேற்று மாலை உயிரிழந்தார். கேன்சர் பாதிப்பால் இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் பவதாரிணி. பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், பவதாரிணியால் இளையராஜா நெகிழ்ந்த ஒரு தருணத்தின் போட்டோ வைரலாகி வருகிறது.

பவதாரிணியால் நெகிழ்ந்த இளையராஜா: முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று (ஜன.25) மாலை உயிரிழந்தார். திடீரென கேன்சர் பாதிப்பு இருந்ததை அறிந்த அவர், இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த மருத்துவமனையிலேயே பவதாரிணி உயிரிழந்தார். இதனையடுத்து இளையராஜா, யுவன் ஆகியோர் இலங்கை சென்றனர்.

 Bhavatharini: Ilaiyaraaja with Bhavadharini at the Yuvan 25 event photo is trending

பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, இளையராஜாவின் இல்லத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இளையராஜா, யுவன், கார்த்திக் ராஜா என மூவரின் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார் பவதாரிணி. அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற மற்ற இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்துள்ளார். பவதாரிணியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன், பாரதிராஜா, விஷால், சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரசிகர்களும் பவதாரிணியின் பாடல்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி நான்கு பேரும் ஒன்றாக மேடையில் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.

ரொம்பவே அரிதான இந்த போட்டோ குறித்து இளையராஜா, யுவன், பவதாரிணி ஆகியோரே ஒருவரை ஒருவரை ஜாலியாக கலாய்த்தும் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன் 25 என்ற டைட்டில் நடைபெற்ற இதில் இளையராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது யுவனின் சிறுவயது சேட்டைகளை மேடையில் சொல்லி இளையராஜாவும் பவதாரிணியும் கலாய்த்தனர். இளையராஜா கூட அப்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு "எங்களை நாங்களே நாலு பேரும் ஒரே மேடையில் பார்க்கறது எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு!" எனக் கூறியிருந்தார். இளையராஜா குடும்பமே ஒன்றாக பங்கேற்ற கடைசி நிகழ்வு இதுதான் என குறிப்பிட்டு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X