முகிலினமே லிரிக் வீடியோ வெளியீடு... பவதாரிணி இசையில் நெஞ்சை அள்ளும் பாடல்
சென்னை : இளையராஜாவின் மகள் பவதாரிணி தன்னுடைய மயக்கும் குரலால் பல்வேறு சிறப்பான பாடல்களை பாடியுள்ளார்.
தன்னுடைய சகோதரர், தந்தை மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.
மேலும் அவ்வப்போது இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தன்னுடைய இசையில் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய விருது பெற்ற பவதாரிணி
பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி இளையராஜாவின் மகள். இவர் தன்னுடைய தந்தை, சகோதரர்கள் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். பாரதி படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் இவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

ஏராளமான ரசிகர்கள்
மேலும் இவர் பல்வேறு பாடல்களுக்கு தனிப்பட்ட முறையிலும் இசையமைத்துள்ளார். மாயநதி உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து தன்னை சிறப்பான இசையமைப்பாளராகவும் நிலைநிறுத்தியுள்ளார். இவரது தேனமுத குரலில் பல பாடல்கள் வெளிவந்துள்ளன. இவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இசையமைப்பாளராக அறிமுகம்
மித்ரு மை ப்ரெண்ட் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன பவதாரிணி, தொடர்ந்து சில படங்களுக்கு இசையமைத்தார். தற்போது இவர் முகிலினமே என்ற பாடலுக்கு தனிப்பட்ட முறையில் இசையமைத்துள்ளார். கிளாசிக் பாடலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை சுஜாதா மோகன் பாடியுள்ளார்.
ட்விட்டரில் வெளியீடு
இந்த பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பவதாரிணி வெளியிட்டுள்ளார். லிரிக் வீடியோவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. எம்பார் கண்ணன் வயலின் இசைக்க சுந்தர் மிருதங்கத்தில் இந்த பாடல் உருவாகியுள்ளது. சிறப்பான மெலடியாக பெண்களின் உரிமையை விவரிக்கும் பாடலாக இந்த பாடல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











