அனேகன் படத்துக்காக வைரமுத்து பாடலை பாடினார் பவதாரிணி!

By Shankar

அனேகன் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்து எழுதிய பாடலைப் பாடினார் இளையராஜா மகள் பவதாரிணி.

கல்பாத்தி அகோரம் அடுத்து தயாரிக்கும் படம் இந்த அனேகன். தனுஷ் நாயகனாக நடிக்க, கேவி ஆனந்த் இயக்குகிறார்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சிகளும் மட்டும்தான் பாக்கியுள்ளனவாம்.

இந்த நிலையில் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட அல்லது விளம்பரத்தை அதிகரிக்க, இளையராஜா மகள் பவதாரிணியை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பதிவு செய்துள்ளனர்.

இதில் விசேஷம் பவதாரிணி பாடிய பாட்டு. அதை எழுதியவர் வைரமுத்து.

ஏற்கெனவே யுவன் சங்கருக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து. அது இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவுக்கு பிடிக்கவில்லை. இளையராஜா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை.

அடுத்து இப்போது இளையராஜாவின் ஆசி நிறைந்தவர் என்ற கூறப்படும் பவதாரிணியை வைத்து வைரமுத்து பாடலைப் பாட வைத்திருக்கிறார்கள்.

Bhavatharini rendered Vairamuthu's song

அன்னக்கொடி படம் தொடங்கியதிலிருந்தே இளையராஜாவுடன் இணைய பெரு விருப்பம் காட்டி வந்தார் வைரமுத்து. ஆனால் ராஜா தன் நிலையிலிருந்து இறங்கி வரவே இல்லை. இதனால், ராஜாவின் வாரிசுகளுடன் இணைந்து தன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் வைரமுத்து.

வைரமுத்து பாடலை பவதாரிணி பாடுவது இதுவே முதல் முறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X