For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அச்சச்சோ அந்த விஜய் டிவி பிரபலத்துக்கு காலில் அடிபட்டுடுச்சாம்.. பாவம் அதை எப்படி பண்ணப் போறாங்களோ?

  |

  சென்னை: விஜய் டிவி பிரபலத்துக்கு காலில் அடிபட்ட விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  Jyothika ok...Ramya Krishnan எப்படி ? | Dubbing artist Keerthika | Filmibeat tamil

  கலர்ஸ் தமிழ், ஜி தமிழ் தொலைக்காட்சிகள் வந்த பிறகு, விஜய் டிவியின் ஆதிக்கம் சற்று குறைந்திருந்தது.

  மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிவிப்பு வந்ததில் இருந்து விஜய் டிவி பற்றியும், அதன் பிரபலங்களை பற்றிய பேச்சுக்களே சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.

   நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு.. சகோதரர், மானேஜர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை ரியாவுக்கும் சம்மன்! நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு.. சகோதரர், மானேஜர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை ரியாவுக்கும் சம்மன்!

  பிரபல தொகுப்பாளினி

  பிரபல தொகுப்பாளினி

  விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர்கள் டிடி எனப்படும் திவ்ய தர்ஷனி மற்றும் பாவனா பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தான். செல்லக் குரலுக்கான தேடல் என தனது இனிமையான குரலில் ரசிகர்களை வசீகரிக்கும் பாவனா பாலகிருஷ்ணன் காலில் தான் இப்போ அடிபட்டுள்ளது.

  ஐபிஎல் பேச்சாளர்

  ஐபிஎல் பேச்சாளர்

  விஜய் டிவியில் பிரபல விஜேவாக இருந்து வந்த பாவனா பாலகிருஷ்ணன், ஸ்டார்ஸ் தமிழ் தொடங்கப்பட்ட நிலையில், அதிலும் இணைந்து கொண்டு பல கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஐபிஎல் போட்டிகள் துபாயில் தொடங்க உள்ள நிலையில், தற்போது அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாம்.

  ஐபிஎல் வர்ணனைக்காக

  ஐபிஎல் வர்ணனைக்காக

  துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொகுப்பாளர்கள் கிரிக்கெட் அப்டேட்களையும், வர்ணனைகளையும் கொடுக்க விமானம் மூலமாக புறப்பட்டு உள்ளனர். விமானத்தில் கிளம்பும் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனக்கு அடிபட்ட விஷயத்தை பாவனா பகிர்ந்துள்ளார்.

  ஆர்.ஜே. பாலாஜி

  ஆர்.ஜே. பாலாஜி

  மூக்குத்தி அம்மன் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்கிற நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனை கொடுக்க ஆர்.ஜே. பாலாஜி, முத்து, பாவனா பாலகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர்கள் பாலாஜி, ஹேமங் பதானி, கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  நலம் விசாரித்த ரசிகர்கள்

  நலம் விசாரித்த ரசிகர்கள்

  இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட நடன வீடியோக்களை தோழிகளுடன் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ் வித்து வந்த பாவனா பாலகிருஷ்ணன், காலில் அடிபட்டு உள்ள நிலையில், கவனமா இருங்க, உடம்பை பார்த்துக்கோங்க, ஐபிஎல் போட்டியை விட உங்களுடைய பேச்சைக் கேட்க தான் ஆவலோடு காத்திருக்கிறோம் என ஏகப்பட்ட ரசிகர்கள் நலம் விசாரித்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

  கொரோனா இல்லை

  கொரோனா இல்லை

  மேலும், விமானம் மூலமாக ஐபிஎல் வர்ணனைக்காக செல்லும் முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் என்று வந்ததாகவும், காலில் தான் எதிர்பாராமல் அடிபட்டு விட்டதாகவும், நல்ல வேளையாக தனது கணவர் தன்னுடன் துணைக்கு வருகிறார் என்றும் பதிவிட்டுள்ளார் பாவனா.

  டிடி ஷாக்

  டிடி ஷாக்

  பாவனா பாலகிருஷ்ணனுக்கு காலில் அடிபட்ட செய்தியை அறிந்த பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன், "ஓ நோ ப்ளீ கெட் வெல் சூன்" என ஷாக்காகி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் பாவனா விரைவில் குணமடைய வேண்டி வருகின்றனர்.

  English summary
  Vijay tv and Star Sports tamil fame Bhavna Balakrishnan got injured in her leg. She begin her journey for IPL 2020 season. She shared a video in flight and shared his leg injury in a instagram video.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X