'சிக்ஸ்பேக் வச்சுகிட்டு அழறதெல்லாம் அபத்தம்..' பிக் பாஸை அப்படி கிண்டலடித்த பிரபல தொகுப்பாளினி!

By

சென்னை: பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அழுவது அபத்தமாக இருக்கிறது என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறியுள்ளார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Unseen Video | Day 23 • 'என்ன நினச்சினு இருக்க' Shivani ஆவேசம்

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் வர்ணனை

கிரிக்கெட் வர்ணனை

பரத நாட்டிய கலைஞரான இவர், நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கிறார். இப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது. அதைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார், பாவனா.

சுசித்ரா என்ட்ரி

சுசித்ரா என்ட்ரி

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி ஏதாவது கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். சில நாட்களுக்கு முன், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், பிக் பாஸ் சுவாரஸ்யமாக மாற போகிறது என தெரிவித்திருந்தார். பாடகி சுசித்ராவின் என்ட்ரி பற்றி அப்படிச் சொன்னாரா என்று கேள்வி எழுந்தது.

கிண்டல், கண்ணீர்

கிண்டல், கண்ணீர்

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, நடிகை ரேகா வெளியேறிய பின்பும் 16 பேருடன் நடந்து வருகிறது கலகலவென. அர்ச்சனா என்ட்ரியானதால், இன்னும் சுவாரஸ்யமாகி இருக்கிறது, இந்த வீடு. அடிக்கடி நடக்கும் மோதல், கிண்டல், கண்ணீர், சென்டிமென்ட் என செல்கிறது.

பாவனா கிண்டல்

பாவனா கிண்டல்

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை இப்போது கிண்டலடித்து இருக்கிறார், பாவனா பாலகிருஷ்ணன். ஓவர் நாடகமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள பதிவில், நான் 50 நாட்களுக்கு மேலாக ஐபிஎல்-லுக்காக குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், நான் அழுவதில்லை, எமோஷன் ஆவதில்லை.

எவ்வளவு அபத்தம்?

எவ்வளவு அபத்தம்?

அல்லது அனைவரையும் என் அம்மா, அக்கா என்று கூச்சலிடுவதில்லை. இங்கு உண்மையான, நெருங்கிய நண்பர்கள் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் 3 வாரங்களில் இப்படியெல்லாம் சொல்வது எவ்வளவு அபத்தமானது? என்று கூறியுள்ளார்.

அதனால அழறாங்க

அதனால அழறாங்க

இதற்கு சில நெட்டிசன்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 'நீங்க வீட்டுக்கு வெளியில கையில போன் வச்சிருக்கீங்க, பலரை மீட் பண்றீங்க. பிக் பாஸ் வீட்டுல போன் இல்ல, இன்டர்நெட் இல்ல, நிறைய பேரை சந்திக்கலை, அதனால அவங்க அழறாங்க என்று பலர் கூறியுள்ளனர்.

சிக்ஸ்பேக் அழுகை

சிக்ஸ்பேக் அழுகை

சிலர், சிக்ஸ்பேக் உடம்பை வச்சுக்கிட்டு அழறதெல்லாம் ரொம்ப நாடகமா இருக்கு. என்னதான் ஸ்கிரிப்ட்டுன்னாலும் தாங்க முடியலை என சிலர் தெரிவித்துள்ளார். பாவனாவின் நெருங்கிய தோழி, சம்யுக்தா பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். 'உங்க கருத்து சம்யுக்தாவுக்கும் பொருந்துமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X