Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பீம் பீம் பீம் பீம்லா நாயக்... வெறித்தனமாக வெளியாகும் பீம்லா நாயக் பாடல் ரிலீஸ் அப்டேட் !
சென்னை! பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் மிரட்டலான நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்
இப்படம் இப்போது தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் தயாராகி வருகிறது இதில் பவன் கல்யாண் மற்றும் ராணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்
இப்படம் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பீம்லா நாயக் பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு l வெளியிட்டுள்ளது
தெலுங்கு
படத்தில்
நடிக்க
ரூ.7
கோடி
கேட்ட
மாநாடு
வில்லன்?...
அதிர்ச்சியடைந்த
தயாரிப்பாளர்!

அதிகார மோதலை
மலையாளத்தில் வெளியாகும் பல படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற திரைப்படம் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கும் அதிகாரத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இதையே நடக்கும் அதிகார மோதலை ஆக்ஷன் கலந்து விறுவிறுப்பு குறையாமல் இயக்குனர் சச்சி இயக்கி இருந்தார். மலையாளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய இந்தப் படம் இப்போது தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது

தெலுங்கில் ரீமேக்
பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு பீம்லா நாயக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சாகர் கே சந்திரா இப்படத்தை இயக்கி வர திரிவிக்ரம் திரைக்கதை எழுதியுள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். இதில் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக ராணாவும் , அதிகாரத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக பவன் கல்யாணும் நடித்து உள்ளனர்

பவன் கல்யான் ராணா மோதல்
அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து கடந்த சங்கராந்தி பண்டிகையில் பினாயக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பின் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பதில்லை வதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு 2 தேதிகளில் அறிவித்திருந்தது. இறுதியாக பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீம்லா நாயக் பாடல் ரிலீஸ் தேதி
இசையமைப்பாளர் எஸ் தமன் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது அடுத்த கட்டமாக சூப்பரான அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. பீம்லா நாயக் பாடல் இன்னும் சில தினங்களில் ஆக்ரோஷத்துடன் வெளியாகும் என படக்குழு அட்டகாசமான அப்டேட்டுடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டு உள்ளது. அதில் பவன் கல்யாண் ஆக்ரோஷத்துடன் நடனமாடியவாறு உள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் பீம்லா நாயக் பாடல் வெளியாக உள்ளது.