பீம்லா நாயக் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : நடிகர் பவன் கல்யாண் மற்றும் ராணா இணைந்து நடித்துவரும் திரைப்படம் பீம்லா நாயக்

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் பீம்லா நாயக் என்ற பெயரில் தயாராகி வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

வசூலை வாரிக் குவித்தது

வசூலை வாரிக் குவித்தது

இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கிலும் இந்த திரைப்படம் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் ஆனது . அதில் நடிகர் பவன்கல்யாண் மிக சிறப்பாக நடித்து தெலுங்கு படவுலகில் பெரும் வசூலை வாரிக் குவித்தது

அடுத்ததாக பவன் கல்யாண் பிரபல மலையாள திரைப்படம் ஐயப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் சாசி இயக்கத்தில் பிஜு மேனன் மற்றும் பிரித்விராஜ் இணைந்து கலக்கிய ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் இந்த படம் அதிக அளவு கவனத்தை ஈர்த்தது

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு நகரும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ரீமேக் செய்யப் படுவதாக அப்போதே செய்திகள் வெளிவந்தன. ஆனால் தமிழில் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை, தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈகோ மோதலில்

ஈகோ மோதலில்

மலையாளத்தில் ஐயப்பனும் கோஷியும் என்ற பெயரில் உருவான இந்த திரைப்படத்தில் பிரித்விராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். பிஜு மேனன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ள உயர் அதிகாரத்தில் இருக்கும் இருவரும் ஈகோ பிரச்சினை காரணமாக மோதிக்கொள்கிறார்கள் அந்த மோதலின் காரணமாக ஏற்படும் பிரச்சினையே இந்த படத்தின் மையக் கருவாக அமைந்தது. அதனை இயக்குனர் சாசி மிக சிறப்பாக கையாண்டிருந்தார்.

ஜனவரி 12ம் தேதி

ஜனவரி 12ம் தேதி

இப்பொழுது ஐயப்பனும் கோஷியும் தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணுவ அதிகாரியாக ராணாவும், பிஜுமேனன் கதாபாத்திரத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பவன் கல்யாணும் நடித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நித்யா மேனன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 12ம் தேதி சங்கராந்தி பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X