ஆக்ஷனில் மிரட்டும் பவன் கல்யாண்,ராணா.. மசாலா தூக்கலாக வெளியான "பீம்லா நாயக்" டிரைலர்!
சென்னை: பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா இணைந்து நடித்துள்ள திரைப்படம் பீம்லா நாயக்
மலையாளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்காக பீம்லா நாயக் உருவாகியுள்ளது
கடந்த சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பீம்லா நாயக் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்போது அதன் மாஸான டிரைலர் வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்புகிறது.

அய்யப்பனும் கோஷியும்
நடிகர் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சாச்சியின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பிரித்விராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், பிஜு மேனன் அதிகாரத்திலுள்ள போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் பிஜுமேனனுக்கும் பிரித்விராஜூக்கும் ஏற்படும் சிறு பூசல் பின் ஈகோ மோதலாக மாறி இருவரும் மோதிக்கொள்கிறார்கள். உண்மை தன்மை மாறாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட அய்யப்பனும் கோஷியும் மலையாள ரசிகர்களையும் கடந்து பல மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்போது அய்யப்பனும் கோஷியும் தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் உருவாகியுள்ளது

தெலுங்கில் பீம்லா நாயக்
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களாக உள்ள பவன்கல்யாண் மற்றும் ராணா லீட் ரோலில் இதில் நடித்துள்ளனர். இயக்குனர் சாகர் கே சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். திரிவிக்ரம் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். சித்தாரா என்டர்டைன்மென்ட் சார்பாக சூர்யா தேவரா நாகவம்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.

பக்காவான மாஸ் படமாக
பீம்லா நாயக் தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு பக்காவான மாஸ் படமாக தற்போது உருவாகியுள்ளது.
இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவும், பிஜு மேனன் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் பவன் கல்யாணும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நித்யா மேனன் மற்றும் சம்யுக்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

அனல் பறக்கும் டிரைலர்
கடந்த சங்கராந்தி பண்டிகைக்கு பீம்லா நாயக் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திரையரங்குகள் எதிர்பார்த்தபடி திறக்கப்படாததால் இப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பீம்லா நாயக் டிரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கு படங்களுக்கே உரித்தான மசாலா கொஞ்சம் தூக்கலான காட்சிகளுடன் பவன் கல்யாண் மற்றும் ராணா போட்டி போட்டு நடித்துள்ள பீம்லா நாயக், அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்புகிறது.


Click it and Unblock the Notifications











