பீம்லா நாயக் 2வது சிங்கிள் அப்டேட் வெளியானது!
சென்னை : மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் தயாராகி வருகிறது.
அடுத்த வருடம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்கி வருகிறார்.
பவன் கல்யாண், ராணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் பீம்லா நாயக் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள பவன் கல்யான் கடைசியாக பிங்க் தெலுங்கு ரீமேக் வக்கீல் சாப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாகி இருக்க அஞ்சலி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். வக்கீல் சாப் தொடர்ந்து மீண்டும் ஒரு ரீமேக் திரைப்படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார்.

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்
மலையாளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார். பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் சாசி இயக்கி இருந்த இந்த திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து இப்படத்தை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினர் . அந்த வகையில் இப்போது தெலுங்கில் சாகர் கே சந்திரா இப்படத்தை இயக்கி வருகிறார். சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் படத்தை தயாரிக்கிறது.

தெலுங்கில் பீம்லா நாயக்
பிஜுமேனன் நடித்திருந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் நடித்திருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் ராணாவும் நடித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் நித்யா மேனன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வர சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

2வது சிங்கிள் ரிலீஸ் தேதி
இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் இசையில் பீம்லா நாயக் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பியது . அதனைத் தொடர்ந்து இப்பொழுது 2வது சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. 2வது சிங்கிள் "அந்தா இஷ்டம்" என்ற மெலோடி பாடல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











