பீம்லா நாயக் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை: மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கிலும் பீம்லா நாயக் என்ற பெயரில் உருவாகி வருகிறது

பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்கியுள்ளார்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த பீம்லா நாயக் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது பின் கொரோனா சூழல் காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டு இப்பொழுது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈகோ மோதலை

ஈகோ மோதலை

மலையாளத்தில் இயக்குனர் சச்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் என இரண்டு முன்னணி நடிகர்கள் படத்தில் போட்டி போட்டு நடித்து இருந்தனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலை மையமாகக் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டுக்களை பெற்றது. இந்த நிலையில் அய்யப்பனும் கோஷியும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிறது என கூறப்பட்டது . அதன்படி இப்போது தெலுங்கு ரீமேக் பீம்லா நாயக் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராணா டகுபதி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் பவன் கல்யாண் பிஜு மேனன் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்திலும் ராணா பிரித்திவிராஜ் நடித்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கின்றனர். சூர்யா தேவர நாகவம்சி இப்படத்தை தயாரித்து உள்ளார். சாகர் கே சந்திரா இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார்.

ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக

ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராணா டகுபதி ஜோடியாக சம்யுக்தா மேனன் இப்படத்தில் நடித்துள்ளனர் . இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் ராணா மற்றும் பவன் கல்யாண் மோதிக் கொள்ளும் காட்சிகள் திரையரங்குகளை தெறிக்கவிட இருக்க கடந்த சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை மிக தீவிரமாக பரவுவதால் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்திருந்தது.

புதிதாக இரண்டு ரிலீஸ் தேதிகள்

புதிதாக இரண்டு ரிலீஸ் தேதிகள்

இந்த நிலையில் புதிதாக இரண்டு ரிலீஸ் தேதிகளை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 25ம் தேதி அல்லது ஏப்ரல் 1ம் தேதி பீம்லா நாயக் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X