வாயை பொத்திக் கொண்டு.. லைவ் வீடியோவிலேயே கதறி அழுத இளம் நடிகை.. அப்பவே தற்கொலை முடிவில் இருந்தாரா?

மும்பை: இளம் போஜ்புரி நடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 வயதே ஆன போஜ்புரி நடிகை நேற்று இரவு ஹோட்டல் அறைக்கு சென்று ரசிகர்களுடன் லைவ் வீடியோ செய்துள்ளார்.

அப்போதே மனம் உடைந்து வேதனையில் இருந்த அவர் கதறி அழுத காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

போஜ்புரி நடிகை தற்கொலை

போஜ்புரி நடிகை தற்கொலை

'மெரி ஜுங் மெரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் போஜ்புரி சினிமாவில் அறிமுகமானவர் ஆகான்ஷா துபே. 25 வயதான இளம் நடிகை இன்று அதிகாலை ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். பெண் போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

லைவ் வீடியோ

லைவ் வீடியோ

தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கு முன்னதாக ரசிகர்களுடன் லைவ் வீடியோவில் கனெக்ட் ஆகி இருக்கிறார் ஆகான்ஷா துபே என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த லைவ் வீடியோவையும் ரசிகர்கள் ஷேர் செய்து உயிரிழந்த நடிகையின் ஆன்மா சாந்தியடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லைவிலேயே கதறி அழுத நடிகை

போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஹார்ட்டீன்களை விட்டும் வாவ், சூப்பர், எப்படி இருக்கீங்க என நலம் விசாரித்தும் ரசிகர்கள் வந்ததை பார்த்து ஒரு கட்டத்தில் மனம் குமுறி நடிகை ஆகான்ஷா துபே வாயை பொத்திக் கொண்டு கதறி அழுத காட்சிகள் அந்த லைவில் இடம்பெற்றுள்ளன.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

நடிகை ஆகான்ஷா துபே திடீரென அப்படி அழுததை பார்த்த ரசிகர்கள் என்னங்க ஆச்சு? ஏதாவது பிரச்சனையா என அனுதாபத்துடன் விசாரித்த நிலையில், அப்போதாவது தனது பிரச்சனையை ஷேர் செய்து மனதை ரிலாக்ஸ் செய்திருந்தால் இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்க மாட்டாரே என ரசிகர்கள் தற்போது வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடரும் தற்கொலை மரணங்கள்

தொடரும் தற்கொலை மரணங்கள்

பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி எடுத்த நிலையில், அடிக்கடி இதுபோன்ற வளரும் நடிகைகளும் காதல் தோல்வி, சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத மனவேதனை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர் என்றும் தற்கொலை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்றும் அது போன்ற எண்ணங்கள் வந்தால் மருத்துவரையோ நண்பர்களையோ அணுகி மனம் விட்டு பேசுங்கள் என மன நல மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X