ஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை
லக்னோ: ஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் போஜ்புரி நடிகை மனிஷா ராய் சாலை விபத்தில் பலியானார்.
போஜ்புரி படங்களில் நடித்து வந்தவர் மனிஷா ராய்(45). அவர் வெள்ளிக்கிழமை படப்பிடிப்புக்கு தனது உதவியாளர் சஞ்சிவ் மிஷ்ராவுடன் பைக்கில் கிளம்பினார்.

மிஸ்ரா பைக்கை ஓட்ட மனிஷா பின்னால் அமர்ந்திருந்தார். உத்த பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள சித்தானி கிராமத்திற்கு அருகே சென்றபோது வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் பைக் மீது மோதியது.
டிரைவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மனிஷா சம்பவ இடத்திலேயே பலியானார். மிஸ்ரா காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த போஜ்புரி கலைஞர்கள் மனிஷாவின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











