Bhojpuri Singer: வக்கிரத்தின் உச்சம்.. 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாடகர்.. பரபரக்கும் பீகார்!

பாட்னா: 13 வயது சிறுமியை போஜ்புரி பாடகர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த 21 வயது போஜ்புரி பாடகர் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த வியாழனன்று கைது செய்யப்பட்டார்.

யூடியூபில் அதிக ஃபாலோயர்களை கொண்ட அபிஷேக் என்கிற பபுல் பிஹாரி தான் இப்படியொரு குற்றச்செயலை புரிந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Bhojpuri Singer rapes 13 year old girl and leaked her obscene pictures online

பாடகர் செய்த வெறிச்செயல்: 21 வயதே ஆன இளம் போஜ்புரி பாடகரான அபிஷேக் எனும் பபுல் பிஹாரி தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளார்.

குழந்தையாக இருந்த அந்த சிறுமி வயதுக்கு வந்த நிலையில், அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்று இப்படியொரு மோசமான வெறிச்செயலில் அந்த இளம் பாடகர் ஈடுபட்டுள்ளார்.

ஆபாச போட்டோக்கள் ஆன்லைனில்: அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அவரது நிர்வாண புகைப்படங்களை எடுத்து அவருக்கே தெரியாமல் ஆன்லைனிலும் வெளியிட்டு பணம் சம்பாதித்து இருக்கிறார் பாடகர் அபிஷேக்.

Bhojpuri Singer rapes 13 year old girl and leaked her obscene pictures online

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், உடனடியாக காவல் நிலையத்தில் அந்த பாடகருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த பாடகர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளியே சொல்லாத சிறுமி: பாடகர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அது பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என அந்த பாடகர் மிரட்டியே அந்த ஆபாச போட்டோக்களை எடுத்தார் என்றும் முதலில் இதுகுறித்து வெளியே சிறுமி சொல்லாமல் மறைத்திருந்த நிலையில், அவரது ஆபாச போட்டோக்கள் வெளியான விஷயம் பெற்றோருக்கு தெரிந்து விசாரித்ததில் தான் இப்படியொரு அநியாயம் தங்கள் மகளுக்கு நேர்ந்துள்ளது என்பதை அறிந்த பெற்றோர்கள் மன வேதனை அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X