என்னது வேதாளம் கிரிஞ்ச் படமா.. போலா ஷங்கர் இயக்குநரை வெச்சி செய்யும் அஜித் ரசிகர்கள்!
சென்னை: அஜித் நடித்த வேதாளம் கிரிஞ்ச் படம் என்று சொன்ன போலா ஷங்கர் இயக்குநரை அஜித் ரசிகர்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் வேதாளம். இப்படம் 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது.

இந்த படத்தில் லஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, அஷ்வின் காக்கமனு, ராகுல் தேவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
வேதாளம் ரீமேக்: அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான வேதாளம் படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் போலா சங்கர் என்ற பெயரில் உருவாகி உள்ளது.இந்த படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும், தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம், கதாநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு மஹதி சங்கர் இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 11ந் தேதி ரிலீஸ்: அதிரடி ஆக்ஷன் நிறைந்த இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் பாசமிகு அண்ணனாகவும், ரௌடி என இரண்டு விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் போலா ஷங்கர் படம் ஆகஸ்ட் 11-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இயக்குநர் சர்ச்சை பேச்சு: படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே இருப்பதால், போலா ஷங்கர் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. இதில், மெகாஸ்டார் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா, இசையமைப்பாளர், இயக்குநர் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் மெஹர் ரமேஷ், வேதாளம் படத்தில் அஜித் நடித்ததை விட சிரஞ்சீவி அட்டகாசமாக நடித்துள்ளார் என்றார்.
விளாசும் நெட்டிசன்ஸ்: மேலும், வேதாளம் படம் கிரிஞ்ச் படம் இதனால், போலா ஷங்கர் படத்தில் சில மாற்றங்களை செய்து வித்தியாசமான திரைக்கதை அமைத்து இருக்கிறோம் என்று பேசி இருந்தார். இயக்குநர் பேசியது வைரலானதை அடுத்து டென்ஷனான அஜித் ரசிகர்கள், என்ன வேதாளம் கிரிஞ்ச் படமா என்றும், அப்போ எதுக்கு ரீமேக் செய்தீங்க என்று போலா ஷங்கர் இயக்குநரை கண்டபடி திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











