Bholaa: பாலிவுட்டில் அடுத்த மரண அடி... அஜய்தேவ் கன் அப்செட்... பருப்பு வேகாத கைதி ரீமேக் போலா!
மும்பை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
கார்த்தி, நரேன் நடிப்பில் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்தப் படத்தை இந்தியில் அஜய்தேவ் கன் ரீமேக் செய்து அவரே ஹீரோவாக நடித்தார்.
பாலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாலிவுட்டில் அடுத்த மரண அடி
மாநகரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி 2019ம் ஆண்டு வெளியானது. கார்த்தி, நரேன் நடித்த இந்தப் படம் 25 பட்ஜெட்டில் உருவாகி 100 கோடிக்கும் மேல் கலெக்ஷன் செய்து மாஸ் காட்டியது. மேக்கிங், கார்த்தியின் ஆக்ஷன் என படம் முழுவதும் விஷூவல் ட்ரீட்டாக அமைந்தது. இதனைப் பார்த்து ஆசைப்பட்ட அஜய்தேவ் கன், கைதி படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்.
போலா என்ற டைட்டிலில் உருவான கைதி இந்தி ரீமேக்கை, அஜய்தேவ் கன் இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடித்தார். 3டியில் உருவான இந்தப் படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, நெட்டிசன்களால் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்டது. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் அஜய்தேவ் கன் செய்த அட்ராசிட்டி எல்லாம் வேறலெவலில் ட்ரெண்டிங் ஆனது.
ட்ரெய்லருக்கு அந்த நிலை என்றால் முழு படமும் என்ன பாடுபட்டிருக்கும். கைதியில் கார்த்திக்கு ஜோடியே இல்லாத நிலையில், இந்தியில் அமலா பால் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்திருந்தார். இவர்களுக்கு ஒரு டூயட் பாடல், இதுவும் போதாதென்று இன்னொரு குத்துப் பாடல் என, போலா பக்கா இந்திவாலா படமாக வெளியானது. அதுமட்டும் இல்லாமல் நரேன் கேரக்டரில் தபுவை நடிக்க வைத்து தமாஸ் காட்டியிருந்தார் அஜய்தேவ் கன்.

ஆக மொத்தம் கைதி படத்தில் இருந்த ஒரிஜினல் பர்னிச்சர்கள் அனைத்தையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டு, டம்மி டப்பாசாக வெளியாகியுள்ளது போலா. இதனால் பாலிவுட் ரசிகர்களே கடுப்பில் வெறுத்துவிட்டார்களாம். பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனில் பொளந்துகட்டும் என எதிர்பார்க்கப்பட்ட போலா, இப்போது முதலுக்கே வழியில்லாமல் திணறி வருகிறதாம். 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் இதுவரை 60 கோடி தான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்போதே பாதி திரையரங்குகளில் இருந்து போலா தூக்கப்பட்டதால், இதற்குமேல் கலெக்ஷன் டல்லடித்துவிடும் என பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதி படத்திற்குப் பிறகே தனது கேரியரில் டாப் கியரில் பறந்துகொண்டிருக்கிறார் லோகேஷ். ஆனால், அதே படம் இந்தியில் ரீமேக் ஆகி அஜய்தேவ் கன்-ஐ ஆட்டம் காண வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











