twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி படத்தை கேவலப்படுத்தாதீங்க.. அஜய் தேவ்கனை மீம் போட்டு கலாய்க்கும் லோகேஷ் கனகராஜ் ஃபேன்ஸ்!

    |

    சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் போலா.

    அஜய் தேவ்கன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். அதன் டீசர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மீம் போட்டு படத்தை வச்சு செய்து வருகின்றனர்.

    டைட்டிலிலேயே திரிசூலம் இடம்பெற்ற நிலையில், டீசரில் ஹீரோ திரிசூலத்தை வைத்துக் கொண்டு சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும் நிலையில் ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.

    தளபதி 67-க்காக மெகா பட்ஜெட்டை ஒதுக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்… விஜய், லோகேஷ் ஹேப்பி அண்ணாச்சிதளபதி 67-க்காக மெகா பட்ஜெட்டை ஒதுக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்… விஜய், லோகேஷ் ஹேப்பி அண்ணாச்சி

    ஒரிஜினல் ரீமேக்

    ஒரிஜினல் ரீமேக்

    இப்போ தான் அஜய் தேவ்கன் மலையாளத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார். இந்நிலையில், அடுத்த ரீமேக் படமாக கார்த்தியின் கைதி படத்தை போலா என்கிற பெயரில் விரைவில் வெளியிட காத்திருக்கிறார். பாலிவுட் முழுக்க ஒரே தென்னிந்திய படங்களின் ரீமேக்காகவே இருக்கே என்றும் ஒரிஜினல் எப்படி இருக்கு ரீமேக் எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க என கார்த்தி, அஜய் தேவ்கனின் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    அகண்டா ரீமேக்

    அகண்டா ரீமேக்

    நீங்க ஏன்.. கைதி ரீமேக்குன்னு சொல்லிட்டு அகண்டா படத்தை ரீமேக் செய்து வச்சிருக்க என அஜய் தேவ்கனை மீம் போட்டு கைதி படத்தின் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதற்கு காரணம் டீசரில் கையில் சூலத்துடன் அஜய் தேவ்கன் ஒரு கார் மீது குத்தி ஏறி அமரும் காட்சி தான் என்கின்றனர். கைதி படத்தில் கார்த்தியின் கையில் சூலம் இருக்கவே இருக்காத நிலையில், இந்து மக்களை பாலிவுட்டில் கவரும் நோக்கத்திலேயே இந்த காட்சியை அஜய் தேவ்கன் வைத்துள்ளார் என விளாசி வருகின்றனர்.

    3டி வேறயா

    3டி வேறயா

    கைதி படத்தை ரீமேக் செய்யுறேன்னு அஜய் தேவ்கன் என்ன பண்ணி வச்சிருக்காருன்னு தெரியல, இதுல இந்த படம் 3டி வேறயா.. டீசரிலேயே சிஜி காட்சிகள் பார்க்கவே பயமா இருக்கு.. இன்னும் தியேட்டரில் படமாக ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் படம் வெளியானால் நிச்சயம் கைதி படத்தையே இது கெடுத்து விடும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    சீப் காப்பி

    சீப் காப்பி

    கைதி படத்தின் டீசர் எப்படி இருந்தது. ஹீரோவை ஜீப்பில் எப்படி காட்டுவாங்க, இங்கே என்னன்னா ஹீரோ கையில் புத்தகத்துடன் சிறையில் இருந்து வெளியேறும் பில்டப் காட்சிகள் என ஏகப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு மாஸ்டர் பீஸ் படங்களுக்கும் ஒரு சீப் காப்பி இருக்கும் போல என நெட்டிசன்கள் அஜய் தேவ்கனின் இயக்கத்தை வச்சு செய்து வருகின்றனர்.

    லோகி அண்ணா நிலைமை

    லோகி அண்ணா நிலைமை

    போலா படத்தின் டீசரை பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் அண்ணாவின் நிலைமை இப்படித்தான் இருக்கும். ரீமேக் ரைட்ஸை வாங்கி என்னடா இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே என நேசமணி காமெடியை போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

    வித்தியாசமா இருக்கு

    வித்தியாசமா இருக்கு

    கைதி படத்தின் டீசரை அப்படியே காப்பி அடித்தது போல இல்லாமல் ஆரம்பத்திலேயே அஜய் தேவ்கன் ஏதோ வித்தியசமா தர முயற்சித்து இருக்கிறார். படம் எப்படி வந்திருக்குன்னு ரிலீஸ் ஆன உடனே பார்த்து விட்டு சொல்லலாம். அதற்குள் நெகட்டிவிட்டி வேண்டாம் என அஜய் தேவ்கன் ரசிகர்கள் போலா டீசரை டிரெண்டாக்கி வருகின்றனர்.

    அங்கேயும் யூனிவர்ஸ் உருவாகுமா

    அங்கேயும் யூனிவர்ஸ் உருவாகுமா

    கைதி படம் பாலிவுட்டில் உருவாகி உள்ள நிலையில், விக்ரம் படத்தையும் ரீமேக் செய்து அப்படியே அங்கேயும் ஒரு யூனிவர்ஸை உருவாக்குவார்களா என்றும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். பாலிவுட் திரைப்படங்கள் எப்போ ரீமேக் செய்வதை நிறுத்துகிறதோ அப்போது தான் பெரிய வெற்றியை சாதிக்க முடியும் என்றும் ட்ரோல்கள் குவிகின்றன. அதே சமயம் தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருவது இங்கே உள்ள படைப்பாளிகளின் திறமையை பறைசாட்டுகிறது என பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Bholaa vs Kaithi: Fans trolls Ajay Devgn's directing is very artificial than original one and pouring many troll memes. Ajay Devgn's Bholaa teaser out now. It wiil soon hit the theaters soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X